Friday, 20 April 2018

வெள்ளி நகை அணிவதால் என்ன பயன்


   நகைகளை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நகைகளில் தங்க நகை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் வெள்ளிப் பொருட்களையும் அணிய மறுபதில்லை. நகைகள் அணிவது நமது பாரம்பரியத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடல்னின் சில முக்கிய பகுதிகளுக்கு என்றே தனித்தனியாக நகைகள் உள்ளது. இவை அழகுக்கு மட்டும் இல்லாமல், ஆரோகியத்துகாவும் அணியபடுகிறது. அப்படி வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் உண்டாகும் ஆச்சரியமான நன்மைகள் என்ன என்பதை இப்பொழுது பாரக்கலாம்.

   நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் முக்கிய வர்ம புள்ளிகளை தூண்டி, நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளையும் பரமரிகிறது என்று கூட சொல்லலாம். வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதுமே நம் உடலை தொட்டுக் கொண்டு இருப்பதினாலே, நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் என்றும், ஆபரணங்கள் அணிவதினால் நோய்கள் மறைமுகமாக கட்டுபடுத்தப்படுகிறது.

   தங்கம் மட்டும் இல்லாமல் வெள்ளி, முத்து, பவளம் என இந்த மாதிரியான நகைகளை அணிவதினாலேயும் நன்மைகள் ஏற்படுகிறது. எல்லா நாளைகளையும் தங்கத்தில் அணியும் நாம். கொலுசை மட்டும் தங்கத்தில் அணிவதில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், தங்கத்தில் மஹா லட்சமி குடியிருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதனால் கொலுசை காலில் அணிவதில்லை. காலில் அணியும் எல்லா நகைகளும் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.


    வெள்ளி நகைகள் நம்முடைய ஆயுளை விருத்தி செய்ய கூடியது. நம் உடலின் சூட்டை அகற்றி குளிர்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அதிக முத்துகள் கொண்ட கொலுசுகள் அணிந்து விடுவதனால், குழந்தைகள் இருக்கும் இடத்தை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. வெள்ளி கொலுசு குதிங்கால் நரம்பை தொட்டுக்கொண்டு இருபதனால், குதிங்காளின் பின் நரம்பு வழியாக மூளைக்கு செல்கின்ற உணர்சிகளை குலைத்து கட்டுபத்துகிறது. இந்த மாதிரி வெள்ளி அணிவதால் பல நன்மைகள் இருபதனால் தான். இன்னமும் வெள்ளிக்கு உண்டான மவுசு குறையாமல் இருக்கிறது.

No comments:

Post a Comment