சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கிட்டதட்ட
எல்லா வயதுடையவர்களுக்கும், பொதுவாக காணப்படும் நோய் தான் தூக்கத்தில் நடப்பது.
இந்த நோய்க்கு மருத்துவத் துறையில் கூறப்படும் பெயர் SOMNAMBULISM. இந்த பிரச்சனை
பெரும்பாலும் குழைந்தைகளிடம் தான் அதிகம் காணப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட
குழந்தைகள் வளர ஆரம்பித்த உடன், இந்த நோயானது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி
முற்றிலுமாக குணமாகும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து
கொண்டே வரும்.
தூக்கத்தில் நடக்கும் போது ஒருவர் என்ன
வேண்டுமானாலும் செய்யலாம். தூக்கத்தில் பேசுவது, திடீரென எழுந்து உக்காருவது, தூக்கத்திலேயே
வீட்டை சுற்றி வருவது, டேபிள் மற்றும் நாற்காலிகளை நகர்த்தி வைப்பது, இன்னும் சில
நேரங்களில் அவர்களையே அறியாமல் சாபிட கூட செய்வார்கள். இதைவிட பெரிய நிகழ்வு
என்னவென்றால் தூக்கத்திலேயே DRIVING செய்து விபத்தில் சிக்கியவர்களும் உண்டு.
தூக்கத்தில் நடபவர்களுக்கு தாங்கள் என்ன செய்வது
என்றே தெரியாது. இதனால் இவர்கள் விபத்துகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இப்படி தூக்கத்தில் நடபவர்களை எழுப்ப முடியுமா என்றால், கொஞ்சம் சிரமம் தான்.
மேலும் தூக்கத்தில் நடக்கும் போது வேகமாக அவர்களை இழுத்தால், அவர்களால் சிறிது நேரத்திற்கு
சிந்திக்க முடியாது. இதனால் அவர்கள் கொஞ்சம் முரட்டு தனமாக கூட நடந்துகொள்வார்கள்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், தூக்கத்தில் நடப்பவர்களை எழுப்பினால்
அவர்களுக்கு HEART ATTACK வரும் என்றும் நம்பப்படுகிறது, ஆனால் இது முற்றிலும் தவறான
கருத்து.
இந்த தூக்கத்தில் நடக்கும் நோய் எதனால் வருகிறது
என்றால், சரியான தூக்கம் இல்லாதது தான் ஒரு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.
பொதுவாக ஒருத்தர் தூங்கும் போது, அவருடைய மூளை 5 நிலைகளை கொண்ட தூக்கத்தை
கடக்கும். முதல் நிலை உடல் தசைகள் எல்லாம் relax ஆனா பிறகு ஓய்வு எடுக்கும்
நிலைக்கு போகும். இரண்டாம் நிலை தூங்க ஆரம்பிக்கும் நிலை, மூன்றாம் மற்றும்
நான்காம் நிலை என்னவென்றால் ஆழ்நிலை உறங்கும் நிலை, ஐந்தாம் நிலை REM (RABBIT EYE
MOVEMENT) என்று சொல்லகூடிய, கனவுகள் தோன்றும் நிலை.
பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் படி ஒருத்தர்
அவருடைய மூன்றாம் மற்றும் நான்காம் நிலை உரக்கமான ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும்
போது தான் தூக்கத்தில் நடக்க தொடங்குகின்றனர் என்று ஆய்வுகள் மூலம் நிருவித்துள்ளனர்.
இந்த தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.
No comments:
Post a Comment