ஆவிகளை சுலபமாக தொடர்பு கொள்வது எப்படி என்பது
தெரியுமா?. ஆவுஜா BOARD என்பது, ஒரு மரபலகையில் ஆங்கில எழுத்துகள் A முதல் Z
வரையும், எண்கள் ௦ முதல் 9 வரை எழுதப்பட்டு இருக்கும். மேலும், சூரியன் மற்றும்
சந்திரன் படங்களுடன் GOOD BYE என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கும். இது கி.பி.11௦௦
ல் முதல் முதலில் சீனாவில் பயன்படுத்தப்பட்டது.
வெறும் விளையாட்டாக இல்லாமல் முழு முயற்சியுடன்
செயல்பட்டால் மட்டுமே ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள முடியும். மொட்டை மாடி அல்லது
திறந்த வெளிபரப்பு உள்ள இடங்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. முதலில்
நீங்கள் எந்த அறையில் பயன்படுத்த தொடங்குகிரீர்களோ, அந்த அறையை சுத்தமாக வைக்க
வேண்டும். கண்ணாடி, துடைப்பம், செருப்பு போன்றவை அந்த அறையில் இருக்க கூடாது. சாமி
சிலைகளோ அல்லது படங்களோ இருந்தால் அவற்றை நீக்கிவிட வேண்டும். கண்ணாடிகள்
இருந்தால் கூட துணி போட்டு மூடிவிடவும், ஏனென்றால் கண்ணாடிகள் ஆவி உலகத்திற்கும்
நம்முடைய உலகத்திற்கும் பாலமாக நம்பப்படுகிறது.
நீங்கள் தனியாகவே பயன்படுத்தலாம். இருந்தாலும்
ஒரு நண்பரின் துனையுடன் இதை பயன்படுத்துவது நல்லது. இரவு நேரமே இதை பயன்படுத்த
உகந்த நேரம். முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உங்கள் அறையில் இருக்கும்
விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தை மட்டுமே பயன்படுத்த
வேண்டும். வேற எந்த சத்தமும் இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் முக்கியம்,
தரையில் அமர்ந்து பயன்படுத்த வேண்டும்.
முதலில் ஒரு நாணயத்தை அந்த BOARD ன் மீது
வைத்து. அதன் மீது உங்கள் ஆள்காட்டி விரலை வைக்க வேண்டும். வேறு யாரும் உங்களுடன்
இருந்தால் அவரும் அந்த நாணயத்தின் மீது விரலை வைக்க வேண்டும். முதலில் மூன்று முறை
நாணயத்தை சுற்றி விடவும். சுற்றிய பின் இங்கு யாரவது இருகிறார்களா என்று
கேட்கவும். இது தான் முதல் அடி, நீங்கள் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து
விட்டீர்கள். சில நேரம் நாணயம் நகராது. ஒருவேளை அந்த அறையில் ஆத்மாக்கள் இல்லாமல்
இருக்கலாம். அல்லது இருந்தும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாமல் கூட
இருக்கலாம். S என்ற எழுத்தை நோக்கி நாணயம் நகர்ந்தால், அந்த அறையில் ஆத்மாக்கள்
இருகின்றன மேலும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் தெரிவிக்கிறது என்று
அர்த்தம்.
உங்களுடைய முதல் கேள்வி, நீங்கள் MOON ல இருந்து
வந்துள்ளீர்களா அல்லது SUN ல் இருந்து வந்துள்ளீர்களா என்று கேட்க வேண்டும். MOON
க்கு பக்கத்தில் நாணயம் நகர்ந்தால் அந்த ஆத்மா அதிகமாக பொய்கள் பேசும். SUN பக்கம்
நகர்ந்தால் உண்மையை மட்டுமே பேசும். இப்பொழுது உங்களின் தொடர்பு ஆரம்பித்து
விட்டது. நீங்கள் வழக்கமான கேள்விகளை கேட்கலாம். முக்கியமாக நீங்கள் சிரிக்கவோ
அல்லது பயமோ பட கூடாது. ஆத்மாவிடம் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கலாம் என்றால்,
உங்கள் பெயர், எந்த வயதில் இறந்திர்கள், எந்த ஆண்டு இறந்தீர்கள், இந்த அறையில்
எத்தனை ஆத்மாக்கள் உள்ளன. இது போன்ற கேள்விளை அவைகளிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள்
கேள்விகளுக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் நாணயம் நகர்ந்து பதில் சொல்லும், அவற்றை நீங்கள்
ஒரு பேப்பரில் எழுதி வைத்தால் சுலபமாக புரிந்து கொள்ளலாம். நாணயம் A முதல் Z
அல்லது 1 முதல் ௦ வரை வரிசையாக நகர்ந்தால், ஆத்மா உங்களுடன் தொடர்பை முடித்து
கொள்ள விரும்புகிறது என்று அர்த்தம். அந்த நேரத்தில் நீங்கள் GOOD BYE என்று சொன்னால்,
நாணயம் GOOD BYE நோக்கி நகர்ந்த பின்னரே நீங்கள் நாணயத்தில் இருந்து விரலை
எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment