Monday, 23 April 2018

இந்த நாடுகளில் சூரியன் மறையாது


   காலையில் சூரியன் உதிக்கும், மாலையில் மறையும், சூரியனை சுற்றியே எல்லா உயிர்களும், தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன. அறிவியலின் கோட்பாடுகளின் படி, இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில், சூரியன் மறையாமல் 24 மணி நேரமும் வெளிச்சத்தை தந்துகொண்டிருக்கிறது. இரவு 7 மணி பொழுதில், கருமை படர்ந்தே பார்த்து பழகிய நமக்கு, பகல் 12 மணியை போல் வெயில் அடித்தால் ஆச்சரியமாக தான் இருக்கும். எந்த எந்த நாடுகளில் இரவு நேரத்தில் சூரியன் தெரிகிறது என்பது பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

   நார்வே: ஆர்டிக் சர்க்கிளில் அமைந்து இருக்கிறது நார்வே, நாடு இரவில் சூரியன் இந்த ஊரில் மிகவும் பிரபலம். இங்கு இரவில் சூரியனை காணவே, பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கே இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சுமார் 1௦௦ ஆண்டுகள் முழுவதுமே, சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

   பின்லாந்து: இது ஆயிரம் எறிகளுடன் இயற்க்கை சூழல் நிரம்பிய இடம், இங்கே கோடை கால ஆரம்பத்தில், சூரியன் உதிக்கிறது, அதன் பிறகு, 73 நாட்களுக்கு பிறகே மறைகிறது. தொடர்ந்து 73 நாட்களும், சூரியனை நாம் பார்க்க முடியும்,

   அலாஸ்கா: இது பனிகட்டிகள் நிறைந்த இடம், மே முதல் ஜூலை வரை, சுமார் 1440 மணி நேரங்கள், இங்கே பகலாகத் தான் இருக்கும். இந்த காலத்தில் இங்கே சூரியன் மறையாது என்பது, குறிபிடத்தக்கது.
ஐஸ்லாந்து, இது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு, மே முதல் தேதியில் இருந்து, ஜூலை கடைசி தேதி வரையில், இங்கே சூரியன் தெரிந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும், மீண்டும் அதிகாலை 3 மணிக்கு சூரியன் உதிக்க தொடங்கிடும்.

   கனடா: அதிக நாட்கள் ஐஸ் கட்டியில் உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இங்கே கோடை காலங்களில் 5௦ நாட்கள் சூரியன் மறையாமல் இறக்கும்,
ஸ்வீடன், இப்பொழுது நாம் குறிப்பிட்ட நாடுகளை ஒப்பிடுகையில், இங்கே குளிர் கொஞ்சம் குறைவு. இங்கே நடு இரவில் சூரியன் மறைந்து, மீண்டும் அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட் வரை இங்கே இப்படி தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment