Thursday, 26 April 2018

செவ்வாய் கிரகத்தில் அப்படி என்ன உள்ளது


   நமது சூரிய மண்டலத்தில், மனிதனின் காலடி பதிக்க வாய்ப்பு உள்ள கிரகம் ஓன்று இருக்கிறது என்றால், அது செவ்வாயாக தான் இருக்கும். மனிதன் சந்திரனுக்கு சென்று வந்தாலும், அங்கு மனிதன் குடியேற முடியாது காரணம். சந்திரன் என்பது கோள் இல்லை. சந்திரன் என்பது பூமியை சுற்றி வரும் ஒரு துணைக் கோள் மட்டுமே.


   புதன் மற்றும் வெள்ளி ஆகியவை, மனிதன் போக கூடிய இடங்கள் என்றாலும், புதன் கிரகத்தின் வெப்பம், பூமியில் உள்ளதை போல் 11 மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் பகல் என்பது சுமார் 3 மாதத்திற்கு இருக்கும். வெள்ளிக்கு செல்லலாம் என்றால், அது அதை விட மோசமான பருவ நிலையை கொண்டுள்ளது. அங்கு காற்று அழுத்தம் மிக அதிகம். ஆளில்லா விண்கலம் வெள்ளியில் சென்று இறங்கினாலும் கூட, அதிகமான அழுத்தம் காரணமாக விண்கலம் வெடித்துவிடும்.


   வெப்பம் மற்றும் காற்றழுத்தம் குறைவாக உள்ள கிரகத்திற்கு செல்லலாம் என்று செவ்வாய்க்கு அடுத்துள்ள வியாழன் மற்றும் சனியை ஆராய்ந்தால் அங்கு வேறு மாதிரியான சூழ்நிலை. அதாவது, பனிக்கட்டி உருண்டைகளாக அவை இருகின்றன. ஆளில்லா விண்கலம் அங்கு போய் இறங்கினாலும், அவை புதை சேற்றுக்குள் சிக்கியது போல், புதைந்து விடும். அதனால் தான் சூரிய கிரக மண்டலங்களில் செவ்வாய் மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்கிறது. அதனால் தான் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக செவ்வாயை நோக்கி அவ்வபோது ஆளில்லா விண்கலங்களை அனுப்பி மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment