Friday, 27 April 2018

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ரோபோ


   உலகின் முதல் முதலில் குடியுரிமை பெற்ற ரோபோ சோபியா, இந்த ரோபோ சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்றது. தற்பொழுது இந்த சோபியா ரோபோ குடும்பம் தான் முக்கியம் என்றும் இதனால் தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

   சோபியா ரோபோ முன்பே பதிவு செய்யப்பட்ட ஓன்று அல்ல. மனிதர்களின் முக பாவனைகளை புரிந்து அதற்கு ஏற்ப பதில்கள் அளிக்கும் வகையில், எந்திர கற்றல் திறனை கொண்ட ரோபோ ஆகும். ஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோ தனது மகள் ரோபோவுக்கு தனது பெயரையே வைப்பேன் என்றும் தெரிவித்துள்ளது. அதன் மூளை சாதாரண wifi யுடன் இணைக்கப்பட்டு இயங்கும். அதில் வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

   அசரவைக்கும் திறமைகள் இருந்தாலும். சோபியாவுக்கு இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோவின் வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன், இன்னும் சில வருடங்களில் இந்த ரோபோவுக்கு உணர்வுகள் கொண்டு வர முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சோபியா ரோபோ, குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விசயமாக தெரிகிறது என கூறியுள்ளது. சொந்த ரத்த வகையை தாண்டியும் மக்களால் தங்களை போன்ற உணர்கள் கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடியும் என்பது மிகவும் அற்புதமான ஓன்று என்றது. உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, அவ்வாறு இல்லைஎன்றால், அத்தகைய குடும்பத்தை பெரும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் மனிதர்களும் ரோபோகளும், ஒரே மாதியானவர்கள் தான் என்று நினைக்கிறன். என்று சோபியா தெரிவித்துள்ளது. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோபியாவிடம் கேட்கும் போது சோபியா என்றே பதில் அளித்தது மிகவும் சுவராசியமான ஓன்று.

   சோபியா ரோபோவால் கலந்துரையாட முடியும். சிரிக்க முடியும், நகைசுவைகளும் சொல்ல முடியும். சவுதி அரேபியாவால் குடியுரிமை கொடுக்கப்பட்ட உடனேயே அந்நாட்டு பெண்களை விட அதிக உரிமைகள் இந்த எந்திரத்திற்கு உள்ளது என்று பலராலும் குறிபிடபட்டது.

No comments:

Post a Comment