Saturday, 28 April 2018

மனிதன் போக முடியாத இடம்



  மனிதன் நிலவுக்கு போகிறான், செவ்வாய் கிரகத்துக்குகூட போய்விட்டான். இப்படி பூமியை விட்டு பல லட்சம் கிலோமீட்டர் தூரம் வெற்றிகரமாக பயணம் செய்த மனிதனால், மனிதன் வாழும் பூமியில் மனிதன் செல்லமுடியாத இடங்களும் உண்டு. அவற்றில் ஒன்று தான் CHALLENGER DEEP.
    இது ஒரு கடல் பகுதியாகும் உலகிலேயே மிக ஆழமான கடல்பகுதி இதுதான். கடலின் சராசரி ஆழம் 4 கிலோமிட்டர் ஆகும். அனால் இந்த CHALLENGER DEEP என்ற இடத்தில் 11 கிலோமீட்டர் உள்ளது. நமது எவரெஸ்ட் மலையை அப்படியே பேர்த்து எடுத்து, இந்த இடத்தில் போட்டாலும் வெறும் 3 கிலோ மீட்டர் ஆழத்தில்தான் கிடக்கும். அப்படிஎன்றால் அதன் ஆழத்தை புரிந்து கொள்ளலாம்.
    ஏன் இந்த இடத்துக்கு போகமுடியாது என்றால் கடல் நீரின் அழுத்தம் தான் காரணம். காற்றுக்கும் அழுத்தம் உண்டு அது நம்மீது ஒரு சென்டி மீட்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் இருக்கும். இது எப்போதும் நம் உடல்மீது அழுத்தி கொண்டே இருக்கும். நம் உடலுக்கு அதை தாங்க கூடிய சக்தி இருப்பதால், அந்த அழுத்தம் நமக்கு தெரிவதே இல்லை. கடலில் 10 மீட்டர் ஆழத்துக்கு சென்றால், இந்த அழுத்தம் இரண்டு மடங்காக இருக்கும். அதுவே 20 மீட்டர் ஆழத்துக்கு சென்றால், 3 மடங்காக இருக்கும். 30 மீட்டர் ஆழத்துக்கு சென்றால் 4 மடங்காக இருக்கும் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சென்றால் இதே அழுத்தும் 400 மடங்காக இருக்கும்.
   இது நம்மை படுக்கவைத்து 50 சிமெண்ட் மூடைகளை மேலே அடுக்குவது போன்று அழுத்தம் கொண்டது. இதுவே 10,000 மீட்டார் ஆழத்துக்கு சென்றால் 11௦௦ மடங்கு இருக்கும். அப்படிஎன்றால் அந்த இடத்தில் மனிதனின் உடலில் நீர் ஊடுருவி செல்லும். அதனால் மரணம் ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது. மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து இருப்பதால் எதையும் பார்க்க முடியாது.
        1960-ம் ஆண்டு டிரிஎஸ் என்ற நீர்மூழ்கி களம் ஓன்று CHELLENGER DEEP ஆழம் வரை சென்றது. அதற்காக கனமான இரும்பு கூண்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. அதனுள்ளே ஜாக் விக்காய் என்ற கடல் ஆராய்ச்சி நிபுணரும் வேல்ஸ் என்ற கடற்படை அதிகாரியும் சென்றனர். அதில் இருந்த கனத்த கண்ணாடி சாதனம் வழியாக அவர்களால் அடிப்பகுதி நிலத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. அங்கு இறங்கி நிற்பது முடியாத காரியம் என்று முடிவு செய்தனர்.

No comments:

Post a Comment