இந்த வினோதமான பழக்கம் கொண்ட மக்கள்
ஆஸ்திரேலியாவில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்றல் உலகின்
பெரும்பாலான பகுதிகள் அதிகம் வெப்பமாதல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றன. இயற்கை
வளங்கள், மனிதர்களின் உடல் ஆரோக்கியம் என அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுதான் உலகின் பலஇடங்களில் வரலாறு காணாத
அளவுக்கு வெப்பம் பதிவானது. பகலில் கடுமையான வெப்பம் இரவில் கடுமையான குளிர்
நிலவுகிறது. இம்மாதிரியான சூழலில் இருந்து தப்பித்து கொள்ளவே, ஆஸ்திரேலியாவில் உள்ள
கூபர்பேடி என்னும் இடத்தில் 1௦௦௦ மேற்பட்ட மக்கள் பூமிக்கு அடியில் வாழ்ந்து வருகின்றனர்.
அடிலைடில் உள்ள ஒரு பகுதிதான் கூபர்பேடி, இவர்களின்
மொத்த வாழ்க்கைக்கு தேவையான கட்டமைப்பும் பூமிக்கு அடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதை காணும் ஒவ்வொரு மனிதரும் பிரம்மிப்பில் மூழ்கிப்போவர்கள்.
மேலும் இங்கு சர்ச், ஹோட்டல், ரெஸ்டாரென்ட்,
பார்க் வீடுகள் என எல்லாமும் உண்டு. மக்கள் இங்குதான் பூமிக்கு அடியில் வாழ்ந்து
வருகின்றனர். குளுமையான இரவு, மற்றும் கொளுத்தும் பகலில் இருந்து காத்துக்கொள்ள இவர்கள்
பூமிக்கு அடியில் வாழ்ந்துவருகின்றனர்.
ஏறத்தாள 4000க்கும் மேற்பட்டவர்கள் கோடைகாலத்தில்
பாதுகாப்பாக வாழ பூமிக்கு அடியில்தான் வாழ்கின்றனர். இங்கு கொடைகாலத்தில்
வெப்பம் 45 டிகிரி வரை நீடிக்கும் என்று கூறுகின்றனர்.
கூபர்பேடி, என்னும் இந்த இடம் ஒரு காலத்தில் ஒருவகையான
மாணிக்ககல் எடுக்கும் சுரங்கமாக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. இங்கு
மிகப்பெரிய கஷ்டம் என்னவென்றால் தண்ணீர் கொண்டுவருவதுதான். 24 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பம்ப் மூலமாக
இவ்விடத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
தற்பொழுது கூபர்பேடி சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும்
ஒரு சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இங்கு மாணிக்ககல் எடுக்கும் சுரங்கவேலை மூலம் கிடைக்கும்
வருமானத்துக்கு இணையாக சுற்றுலா மூலமும் கிடைக்கிறது என்கின்றனர்.
No comments:
Post a Comment