சமிபத்தில் சவூதி அரேபியாவில், சோபியா என்ற
ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி வரலாற்றில் இடம் பெற்றது. ரியாத் நகரில் நடந்த
நிகழ்ச்சி ஒன்றில் ரோபோவிற்கு குடியுரிமை அளித்ததை உறுதி செய்தது. இதன் மூலம்
மனிதன் அல்லாத ஒரு எந்திரத்திற்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு என்னும் பெருமை
பெற்றது சவூதி அரேபியா.
நிகழ்ச்சியில் பேசிய சோபியா ரோபோ, எனக்கு இந்த
கெளரவத்தை அளித்த சவூதி அரேபிய ராஜ்யத்திற்கு மிக்க நன்றி, குடியுரிமை
அங்கீகாரத்தை எனக்கு வழங்கி இருப்பது, வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும் என கூறியது.
சோபியா ஒரு வழக்கமான ரோபோ கிடையாது. இது ஆர்ட்ரே
ஹெர்பன் என்னும் நடிகையின் உடல் மாதிரியை கொண்டு உருவாக்கப்பட்ட பெண் ரோபோ ஆகும்.
இந்த ரோபோ டாக்டர் டேவிட் ஹோண்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் மனித உருவத்தை
போலவே ரோபோவை உருவாக்குவதில் வல்லமை பெற்றவர். மேலும் ஹோண்சன் ரோபோடிகின்
நிறுவனரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சோபியா ரோபோ, ஹோண்சன் ரோபோடிக் நிறுவனம்
உருவாக்கிய ரோபோகளில் மிகவும் மேன்பட்ட தொழில்நுட்பத்தில் உருவான ரோபோ ஆகும்.
மேலும் இது ஊடகங்களை மிகவும் கவர்ந்த ரோபோ ஆகும். ஒரு இசை நிகழ்ச்சியில் பாடல்
ஒன்றை பாடி அனைவரின் மனதையும் கவர்ந்தது.
சோபியா வணிகம் தொடர்பான தொழில்களில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளாதால்,
வங்கிகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் காப்பிட்டு நிறுவங்கள்
முதலியவற்றின் தலைவர்களை சந்தித்துள்ளது.
அரேபிய பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை விட அதிக
உரிமைகளை பெற்றுள்ளது சோபியா. இதற்கு ஆண் பாதுகாவலர் யாரும் இல்லை. இதனால் தனித்து
செயல்பட கூடியது. மேடை ஒன்றில் இதனை உருவாக்கிய ஹோண்சன், தேவை பட்டால் மனிதர்களை
அழிப்பாய என்று கேட்டதற்கு, ஆம் தேவைபட்டால் மனிதர்களை அளிப்பேன் என்று பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment