அரணை கடித்தால் உடன் மரணம் என்று ஒரு நம்பிக்கை பண்டைக்காலத்தில் இருந்து வந்தது.
வளையிலிருந்து
தலையை மட்டும் நீட்டும் அரணையின் கலுத்துவரையுள்ள பாகம் மட்டுமே வெளியில்
தெரியும் என்றதால் ஏதாவது விஷப்பாம்பாக இருக்கும் என்று தவறாக புரிந்து
கொள்வதுண்டு.
விஷம்
தீண்டுவதால் வரும் மரணங்களில் பெரும்பான்மையானதும் பயத்தினால் நிகழ்கின்றன
என்பது நிஜம். அரணை கடித்தால் மரணம் என்ற நம்பிக்கையிலிருந்து யாராவது
அதிக பயத்தினால் வந்த இருதய நோயாள் இறந்து போயிருக்கலாம். இது போன்ற
நிகழ்வுகள் இந்த நம்பிக்கையை உறுதி செய்யுமாறு அமைந்திருக்கலாம் என்று ஒரு
விஷ சிகிட்சை நிபுணர் கூறியிருக்கின்றார்.
இந்தத் தகவல் பலர் கையில் வந்து சேர்ந்து நாளடைவில் அரனையை ஒரு விஷப் பிராணியாகக் காணத் தொடங்கினர் என்று நம்புவதில் தவறில்லை.
எப்படியும்
அரணை எப்போதாவது தான் கடிக்கும் என்றும், கடிக்க நினைத்து வந்தாலும்
ஆளுக்கருகில் வரும் பொது மறந்து திரும்பிவிடும் என்றும் கருதுகின்றனர்.
கடிக்க உத்தேசித்த நபர் அல்ல என்று புரிந்து கொண்டு தான் திரும்பச்
செல்கின்றது என்றும் ஓர் நம்பிக்கை உண்டு. இந்த மறதியின் கதையை வைத்து சில
நபர்களை அரணை புத்தியுடையவன் என்று கூறுவதுண்டு.
சில
அரண்களில் இருபக்கங்களிலும் காணும் நிறம், விஷம் சேகரித்து வைத்திருப்பதாக
பலரும் கருதுகின்றனர். ஆனால் அரணை விஷமில்லாத ஓர் சாதுவான பிராணி என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment