லீனா மெடினா 1933-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பெரு நாட்டில் பிறந்தவர். உலகிலேயே மிக குறைந்த வயதில் தாயனார். அதாவது 5 வயது 7 மாதம் 21 நாட்களில் குழந்தை பெற்று மருத்துவ உலகையே ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். பெரு நாட்டின் கேஸ்ட்ரோ மாகாணத்தில் உள்ள டைக்ராபோ என்ற நகரில் பிறந்த இவரது பெற்றோர் டைபுறேல மற்றும் விக்டோரியா லேசியோ ஆவார்கள்.
லீனா மெடினா 5 வயதாக இருக்கும் போது அவரது
அடிவாயிற்று பகுதி பெரியதாக காணப்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து
சென்றனர். முதலில் லீனா மெடினா வயிற்றில் கட்டி வளர்ச்சி அடைந்திருக்கலாம் என
கருதப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோனையில் லீனா மெடினா வயிற்றில் 7 மாத கரு
வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்தது. ஆச்சரியம் அடைந்த டாக்டர் ஜெரால்டோ கொசடா
என்பவர், லீனா மெடினாவை பெரு தலைநகர் லீமாவுக்கு அழைத்து
சென்று அங்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்து மெடினா கர்ப்பம் அடைந்ததை
உறுதிபடுத்திக் கொண்டார்.
சுமார் 1.5 மாத பல்வேறுகட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு பின் சிறுமி மெடினா தனது 5 வயது 7 மாதம் 21-வது நாளில் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்து மிகக்குறைந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண் என்ற வரலாற்றை படைத்தார். மிகசிறிய இடுப்பு எலும்பு காரணமாக சிசேரியன் மூலம் குழந்தை பிரசவிக்கபட்டது. மேலும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மெடினாவுக்கு 5 வயதிலேயே முழு வளச்சி அடைந்த பாலியல் உறுப்பு இருப்பதை உறுதிசெய்தனர்.
மேலும் பருவப் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்
மெடினாவுக்கு 3 வயதிலேயே துவங்கி விட்டதாகவும் நான்கு வயதில் மார்பக வளர்ச்சி
துவங்கி விட்டதாகவும். 5 வயதில் இடுப்பு எலும்பு விரிவாக்கம் மற்றும் எலும்பு
முதிர்வை பெற்றுவிட்டதாகவும் அவரது மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெடினாவின் குழந்தை 2.7 கிலோகிராம் எடையுடன் இருந்தது. ஜெரால்டோ என பேரிடப்பட்ட
அந்த குழந்தையை மெடினாவின் தம்பி என்று கருதிய பலரும் அவர்தான் தாய் என்பதை
அறிந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.
குழந்தைக்கு யார் தந்தை என்பதையும் அல்லது
அவர் கர்ப்பமான சூழ்நிலையை தெரிவிக்கவும் அந்த இளம் வயதில் மெடினாவால் தெரிவிக்க
முடியவில்லை. இந்நிலையில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக மெடினாவின் தந்தை கைது
செய்யபட்டார். பின்னர் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
இன்றளவும் மெடினாவின் கற்பத்துக் காரணம் மர்மமாகவே உள்ளது.
No comments:
Post a Comment