பூமியின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 6 சதவீத காடுகளில்
தான், உலகில் வாழும் பெரும்பான்மையான ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. இந்த
காடுகள் இரவு நேரத்தில் எப்படி இருக்கும் என்பன பற்றிய சிறு பார்வை.
இரவு நேரத்தில் காடுகள் அமைதியாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு தான். காரணம் நள்ளிரவில்தான் பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் தங்களுக்குள்
பேசிக்கொள்கின்றன. இந்த உயிரினங்களுக்கு இரவு நேரத்தில் தனக்கான துணை
எங்கே இருக்கிறது என்றே தெரியாது. அதனால் தனது இணையை “எங்கேடா செல்லம்
இருக்க?” என்று விடிய விடிய குரல் எழுப்பி கேட்டு கொண்டே இருக்கும்.
தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒழி 5 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் என்று ஒரு வகையான ஆராய்ச்சி கூறுகிறது. காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வவ்வால்களின் தொண்டை கத்தி கத்தியே மார்பு வரை நீண்டு விட்டது. அதன் பரிணாம வளர்ச்சியே மாறி விட்டது. அந்த அளவுக்கு சவுண்ட் கில்லாடியாக இந்த வவ்வால்கள் இருக்கின்றன.
சிங்கம், புலி, சிறுத்தை
போன்றவைகளின் இணைகள் வெகு தொலைவில் எங்கேயோ இருக்கும் இணையை அழைக்க இவை
காடே அதிரும்படி கர்ஜிக்கும். ஆண் சிங்கம் கூப்பிட அதற்கு பெண் சிங்கம்
பதில் சொல்ல டிடிஸ் எபக்டில் காடே அதிரும். இதற்கு நடுவில் யாரவது மாட்டி
கொண்டால் மாட்டியவர் கண்டிப்பாக அச்சத்தின் உச்சத்தை தொடுவார்.
ஆப்ரிக்க யானைகள் எழுப்பும்
ஒழி, அடர்ந்த காடுகளை கிழித்துக் கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும்
கேட்கும். தன் இணை நடந்து வரும் அதிர்வை வைத்தே எவ்வளவு தூரத்தில் தனக்கான
இணை உள்ளது என்று கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள். சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியை தட்டி தன் காதலிக்கு தகவல் தெரிவிக்குமாம்.
இப்படி கத்தல் பார்ட்டிகள் ஒரே நேரத்தில் ஓராயிரம் தகவல்கள் அனுப்ப அமைதியான உரியினங்கள் எப்படி தங்கள் காதல் மொழியை பகிர்ந்து கொள்ள முடியும்? இறைவன் அதற்கொரு வழி இல்லாமலா விட்டிருப்பான். ஒரு சில அமைதியான விலங்குகள் தங்களின் உடல் வாசனையை தூது அனுப்பும். புனுகுப்பூனை, கஸ்தூரி மான், பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்து தான் வம்சத்தை வளர்கின்றனர்.
அமைதியான இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கிய பங்கு தவளைக்கு உண்டு. தவளையின் குரலை வைத்தே அந்த தவளையின் வயது, அளவு பருமன் எல்லாவற்றையும் இணை தவளை அறிந்து கொள்ளும்.
No comments:
Post a Comment