Wednesday, 2 May 2018

வானில் தோன்றிய அதிசய நகரம்


   2015 அக்டோபர் 27-ம் தேதி சீனாவை சேர்ந்த குவாங்டோங் பகுதியில் வாழும் மக்கள் அந்த நகரத்தின் வானத்தில் சில வித்தியாசமான மாற்றங்களை காண ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த பகுதியில் இருந்த மேகங்களில் பல கட்டிடங்களை கொண்ட ஒரு நகரம் மாதிரியான தோற்றம் உருவானது. இந்த தோற்றம் 5-ல் இருந்து 10 நிமிடம் வரை நீடித்தது.

   இந்த நிகழ்வை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் புகைப்படம் மற்றும் விடியோவும் பதிவு செய்துள்ளனர். சிறிது நேரத்தில் எப்படி உருவானதோ அப்படியே மறைந்துவிட்டது. இந்த சம்பவம் நடந்த மூன்று நாட்கள் கழித்து சீனாவின் மற்றொரு பகுதியான ஜியாங்சி பகுதியிலும் இதேமாரிதியான தோற்றம் உருவாக்கியது. அதேபோல சிறிது நேரத்தில் மறைந்தும் விட்டது.
   இந்த மாதிரியான தோற்றம் வானத்தில் தோன்றுவதற்கு அறிவியல் பூர்வமாக பல தகவல்கள் முன்வைக்கபடுகிறது. இந்த நிகழ்வுக்கு அறிவியல் பூர்வமாக கொடுக்கபடுகிற விளக்கம் optical elevation என்று குறிப்பிடுகின்றனர். இதன்படி வெப்பத்தின் காரணமாக தூரத்தில் இருக்கும் பொருட்களின் பிரதிபலிப்பின் காரணமாக இந்த மாதிரி தெரிவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இதை பலரும் ஏற்றுகொள்ள மறுகின்றனர். அப்படி இந்த விளக்கத்தை மறுகின்றவர்களின் கருத்துப்படி பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றது. அதன்படி வேறொரு பரினாமத்தில் இருந்து இந்த மாதிரியான பிரதிபலிப்புகள் தோன்ற வாய்ப்பு இருப்பதாக ஒரு புறம் கூறுகின்றனர்.
   மற்றொரு புறம் நாசாவின் ரகசிய திட்டங்களின் ஒன்றான PROJECT BLUE BEAM மாக இருக்கலாம். இல்லையென்றால் இந்த மாதிரியான ஒரு நிகழ்வு திடிரென வானத்தில் தோன்றினால் மக்கள் எந்தமாதியான அணுகுமுறையை கையாளுகின்றனர் என்று தெரிந்துகொள்வதற்காக இப்படி திட்டமிட்டு செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர். கடந்த ஜனவரி 18-ம் தேதி கூட சைனாவின் யுயியாங் பகுதியில் இதே மாதிரியான மிதக்கும் நகரங்கள் தெரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
   இப்படிப்பட்ட தோற்றங்கள் ஏற்படுவதற்கு அறிவியல் பூர்வமாக பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு விடைகிடைத்தாலும் சீனாவில் மட்டும் ஏன் இம்மாதிரியான நிகழ்வு நடகின்றது என்று இன்னும் புரியாத பிதிராகவே உள்ளது.

No comments:

Post a Comment