கடந்த 2017 ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில்
ஓன்று தான் தலை மாற்று அறுவை சிகிச்சை. 2017 ம் ஆண்டின் நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த தலை
மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை
நடைபெற்றதா, மேலும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை பற்றி இப்பொழுது
பார்க்கலாம்.
2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலியின் நரம்பியல் நிபுணரான
செற்சியோ கேனவர், இந்த ஆண்டின் இறுதிக்குள் உயிருள்ள மனிதனுக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை
மேற்கொள்ளப்படும் என்று வெளிப்படையாக கூறினார். இந்த தலை மாற்று
அறுவைச்சிகிச்சைக்காக தலை பகுதிக்கு கீழ் எந்த உடல் பாகமும் செயல்படாமல் உள்ள,
ரஷ்யாவை சேர்ந்த 35 வயதான வேலரிஸ் ப்ரிடனும், இந்த அறுவை சிகிச்சைக்கு சம்மதம்
தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் இந்த தலை மாற்று அறுவை சிகிச்சையை
நாய்களுக்கும், எலிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு
வெற்றி கிடைத்ததன் மூலம். அடுத்த கட்ட நடவடிக்கையாக உயிருள்ள மனிதனுக்கு தலை மாற்று
அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். இதை மேற்கொள்ள இருந்த நரம்பியல்
ஆராச்சியாளர் கேமரூன், சீனாவில் உள்ள ஹார்பிட் மெடிக்கல் யுனிவெர்சிட்டியில்
வைத்து தான் இந்த தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாக கூறினார். இந்த தலை
மாற்று அறுவை சிகிச்சை மட்டும் வெற்றி அடைந்தாள், ஒரு மாபெரும் சாதனையாக அமையும்
என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த அறிவிப்புக்கு பின்னால், எந்த ஒரு தகவல்
தெரிய வராத நிலையில் நவம்பர் 17 ம் தேதி கேனவரும், தான் வெற்றிகரமாக தலை மாற்று
அறுவை சிகிச்சை மேற்கொண்டு முடித்ததாகவும் கூறினார். ஆனால் கேனவரும் மனித
சடலங்களில் தான் தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த உண்மை வெளியே
தெரிய வரும்போது, பலரும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுரைகளை வெளியிட்டனர்.
உயிருள்ள மனிதனை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கும் உயிரற்ற நிலையில் உள்ள சடலத்தை
வைத்து மேற்கொள்வதற்கு நிறையவே வித்தியாசம் உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் தற்பொழுது இருக்கும் தொழில்
நுட்பத்தை பயன்படுத்தி, இந்த தலை மாற்று அறுவை சிகிச்சை செய்வது சாத்தியம்
இல்லாத செயல் என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது தலை
முதுகு தண்டில் இருந்து தனியாக வெட்டி எடுக்கப்படும். இது கடினமான விஷயம் என்று
சொல்லலாம். இப்படி வெட்டி எடுப்பதன் மூலம் அதனை சுற்றி உள்ள நரம்புகள் மிகுந்த
சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளது. இப்பொழுது இருக்கும் தொழில் நுட்பத்தில், சேதம்
அடைந்த நரம்புகளை சரி செய்வதற்கு கிட்ட தட்ட சாத்தியம் இல்லாத செயல் என்றே
சொல்லலாம்.
அதன் பிறகு வெட்டி எடுக்கப்பட்ட தலையை ஒரு குறிப்பிட்ட
கால அளவுக்குள் இன்னொரு உடலில் ஓட்ட வேண்டும். அப்படி இணைக்க தாமதம் ஆகும் பொழுது
மூளை செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து போக வாய்ப்பு உள்ளது. அப்படியும் இந்த அறுவை
சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ள பட்டாலும் இந்த சோதனையில் ஈடுபத்தபட்ட மனிதர்
மற்றவர்களை போல இயல்பாக வாழ முடியும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதம் இல்லை. அது
மட்டும் இல்லாமல் அந்த நபர் அதிகநாட்கள்
உயிர்வாழ முடியுமான்னு சந்தேகம் தான்.
இதை பற்றி இறுதியாக சொல்லப்பட வேண்டும் என்றால்
இந்த தலை மாற்று அறுவை சிகிச்சையானது இதுவரை முறையாக மேற்கொள்ளப்பட வில்லை என்பது
தான் உண்மை.
No comments:
Post a Comment