மனிதர்கள் பூமியின் மீது உறுதியாக இருந்தாலும்,
இந்த பூமி சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம்
இருக்கும் வீடு இன்று இருக்கும் இடத்தில் தான் இருக்கும். நாளை வேறு ஒரு
இடத்திற்கு மாற போவதில்லை. ஆனால் அர்ஜென்டினாவில் வடகிழக்கு முனையில்
அமைந்திருக்கிற ராணா டெல்டா என்ற ஒரு சின்ன தீவில் வட்டமா அமைந்திருக்கிற
நிலப்பரப்பை சுற்றிலும் 130 அடி அகலத்துக்கு தண்ணீர் சூழ்ந்திருகிறது.
இந்த தீவு தினமும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு
இருக்கிறது என்கின்ற மர்மத்தை ஒரு திரைப்பட இயக்குனர் கண்டுபிடித்துள்ளார். இந்த
இடத்தை I என்று சொல்கிறார்கள். இந்த பகுதியை ஆறு மாதத்துக்கு முன்பு அர்ஜென்டினாவின் திரைப்பட
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான செர்கியோ நேர்கில்லர் என்பவர்தான் கண்டுபிடித்துள்ளார்.
அமானுஷ்யம், பேய், வேற்றுகிரக மனிதர்கள் இந்த மாதிரியான நிகழ்வுகளை வைத்து படம்
எடுக்க இந்த தீவை அடைந்துள்ளார்.
ஆனால் இந்த தீவை அடைந்த இவருக்கு இயற்கையாக
அமைந்த இந்த வட்டமான நிலமும் அதை சுற்றி இருக்கிற நீரும் தானாகவே சுற்றி வருகிறது என்று
பலவிதங்களில் உறுதி செய்துள்ளார். வட்ட பகுதியில் அமைந்து இருக்கிற மரங்கள் ஒரு
நாள் கூட ஒரே இடத்தில் இருப்பதில்லை. இன்று இங்கு இருந்தால் நாளை வேறு ஒரு
இடத்தில் உள்ளது. இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு இந்த மரங்கள்
நகர்ந்து விடுகின்றன.
திரைப்படத்துக்கு இடம் தேடிவந்த இவருக்கு i
பகுதியை வைத்து ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். விரைவில்
ஆராய்ச்சியாளர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் வைத்து இந்த அற்புதமான இடத்தை
உலகறிய செய்யவுள்ளார். அதுமட்டுமல்ல இங்கு உள்ள தண்ணீர் கூட பளிங்கு நிறத்தில்
ரொம்ப குளிர்ச்சியாக உள்ளது. இதில் வேறு எதாவது மருத்துவ குணம் உள்ளதா என்று கண்டுபிடிக்கவும்
உள்ளனர்.
No comments:
Post a Comment