Saturday, 26 May 2018

நாய்கள் தற்கொலை செய்யும் இடம்


   ஸ்காட்லாந்தை சேர்ந்த சிறிய நகரமான டம்பட்டன் என்ற இடத்தில் இருக்கிற ஒரு பாலத்திலிருந்து நாய்கள் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் ஒரு வினோத நிகழ்வுவில் இருந்து உங்களுக்காக சில.


      1896-ம் ஆண்டு லக் ஓவர் டர்ன் என்பவரால் வெஸ்ட் டம்பட்டன் ஷைர் பகுதியில் கட்டப்பட்டதுதான் இந்த மேம்பாலம். நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள இந்த மேம்பாலம் 1950-ம் காலத்தில் திடீரென நாய்கள் அடிகடி கீழே விழுந்து தற்கொலை செய்யத் தொடங்கின.


  1950-ல் ஆரம்பித்த இந்த நிகழ்வு வருடத்திருக்கு குறைந்தது 2 நாய்களாவது விழுந்து இறந்து கொண்டிருந்த நிலையில் இந்த பாலம் உலக அளவில் பிரபலமடைய தொடங்கின. இந்த பாலத்தை பற்றி கேள்விப்பட்ட THE ROYAL SOCIETY FOR PRODUCTION OF BIRD என்கிற அமைப்பு டேவிட் ஜக்சன் என்கிற ஒரு ஆய்வாளரை இந்த பாலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அனுப்பியது.


   பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட டேவிட் ஜக்சன் அந்த பாலத்தில் இருந்து குதித்த நாய்கள் எதாவது ஒரு வாசனையயின் மூலம் ஈர்கபட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியின் முடிவில் அறிக்கை வெளியிட்டார். இருந்தாலும் இங்கு நடக்கும் ஒரு ஆச்சியமான விஷயம் என்வென்றால், இந்த பாலத்தில் இருந்து குதிக்கின்ற நாய்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டும் தான் குதித்து தற்கொலை செய்து கொள்கிறது.


   இந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கான மர்மத்தினை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த இடத்தில் ஏதோ ஒரு அமனுசய நிகழ்வு நடப்பதாக கூறுகின்றனர். 1950-ம் ஆண்டில் இருந்து இது வரைக்கும் கிட்டதட்ட 6௦௦-க்கும் மேற்பட்ட நாய்கள் குதித்து இறந்து விட்டன.


    பல ஆராய்ச்சியாளர்கள் இந்த பாலத்தை ஆராய்ச்சி செய்தாலும் இந்த பாலத்தில் இருந்து நாய்கள் குதிக்கும் மர்மத்தை, அதுவும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து குதிபதற்கான மர்மத்தை மட்டும் யாராலும் இதுவரைக்கும் தெளிவு படுத்த முடியவில்லை.

No comments:

Post a Comment