Monday, 28 May 2018

மண் கேக் சாப்பிடும் மக்கள்


   "ஹைதி" அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்கள். ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால் அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக எப்போது சாப்பிடீர்கள் என்றால் அது யாருக்கும் நினைவில் இல்லை.


    குழந்தைகளுக்கு கூட முதல் நாள் இந்த கேக்கை ஊட்டுகிறார்கள். மறுநாள் குழந்தை வயிற்று வலியால் துடிக்கும். அடுத்த நாள் பட்டினி. அதற்கு மறுநாள் குழந்தை வயிறு காய்ந்து அலறும். அப்போது மீண்டும் மண் கேக் கொடுப்பார்கள். இப்படி கொடுத்து, கொடுத்து அந்த குழந்தைக்கு மண் கேக் பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கூட கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த மண் கேக் ஒருவித களிமண்ணால் செய்யபடுகிறது.


  விலைவாசி உயர்வு, மற்ற நாடுகளை விட ஹைதியை தான் கடுமையாக பாதித்து இருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் கிடையாது. எல்லாமே பொட்டல் காடுகள் தான். எஞ்சியிருந்த காடுகளையும் விறகிர்காகவும் கரிகாகவும் அழித்துவிட்டனர்.


   நிலைமையை மீட்டேடுக்கிறோம் என்று 1980-ல், ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது. எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தது. ஆனால் பொருள்தான் வாங்கமுடியாத உச்சத்தில் இருந்தது. போராட தொடங்கிய மக்கள் இதனால் எந்த பயனும் இல்லை என்ற நிலைக்கு வந்து பிச்சை எடுக்க தொடங்கிவிட்டனர்.


   பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர். இளைஞர்கள் பணகார்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக ஹைதி மாறிவருவது உலகிற்கு தெரியவந்தது, மண்கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகையே உலுக்கி கொண்டிருக்கின்றன.


  பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இதுபோன்ற பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவையாகவே இருந்துவிடும்.

No comments:

Post a Comment