Sunday, 27 May 2018

ஹனுமனை போல பறக்கும் சக்தி பெற்ற மனிதன்

    நம்ம எல்லாருக்குமே ஹனுமானை பற்றி நல்லா தெரியும். அவர்தான், தான் நினைத்த நேரத்தில் எவ்வளவு வேண்டும் என்றாலும் வளருவாரு. பறக்கும் சக்தி அவரிடம் இருந்தது, மலையவே தூக்கும் அளவுக்கு பலம் அவரிடம் இருந்தது. இப்படி பட்ட பல விடயங்களை பல கதைகளில் படித்திருக்கிறோம்.

     ஆனால் அவரால் இதெல்லாம் எப்படி செய்ய முடிந்தது என்று இப்போ இருக்கிற சின்ன குழந்தைகள் கூட கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஹனுமனை நாம நேரில் பார்க்கும் பாக்கியம் நம்மளில் யாருக்கும் கிடைக்கவில்லை.

     அவருடைய பெயர் Daniel Dunglas Home 1833-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி பிறந்தார். சின்ன வயசுலேயே அவருடைய அப்பா அம்மாவை இழந்துவிட்டார். இதனால் அவருடைய அத்தை வீட்டில் தான் வளர்ந்தார். சிறுவயதிலேயே வித்தியாசமான குணங்களுடைய இவருக்கு ஒரு சிறந்த நண்பரும் இருந்தார். அவருடைய பெயர் எட்வின், நாளடையில் அவருடைய நண்பன் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.

              Daniel Dunglas Home க்கு 13 வயது இருக்கும் போது. திடீர்னு ஒரு நாள் தன்னுடைய நண்பன் இறந்தார் போல் தோனுதுன்னு Daniel Dunglas Home அவருடைய அத்தைகிட்ட சொல்கிறார். ஆனால் அவருடைய அத்தை நம்பவில்லை. அதன்பின் 3 நாள் கழித்து எட்வின் இறந்த தகவல் கடிதம் மூலமாக வந்து சேர்ந்தது. அப்பொழுதுதான் Daniel Dunglas Home ஏதோ ஒரு அபூர்வ ஆற்றல் இருக்குனு முதல் முறையாக தெரியவந்தது. சில வருடங்களுக்கு அப்புறம் பல அபூர்வ ஆற்றல் அவருக்கு கிடைத்தது. சிலர் அதை பேய் என்றும் பிசாசு என்றும் கூறினார்கள், இன்னும் சிலர் கடவுளின் வரம்னு சொன்னார்கள்.

     ஒரு முறை பல ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்கள் முன்னாள் தன்னுடைய சக்தியை நிருபித்து கொண்டிருந்தார். அவர் அங்கிருந்த மேஜையை அந்தரத்தில் பறக்க செய்தார் அப்பொழுது அங்கிருந்த ஆராச்சியாளர்கள் பரிசோதித்துவிட்டு இதில் உண்மை ஒன்றும் இல்லை என்று கூறினார்கள். இதனால் கோபம் கொண்ட Daniel Dunglas Home ஒரு சுவரின் ஓரமாக நின்று கொண்டு அவருடைய உயரத்தை அழக்க சொன்னார், அப்பொழுது அவருடைய உயரம் 5 அடி 10 அங்குலம் என அளவிடப்பட்டது. சிறுது நேரத்தில் கண்ணை மூடிகொண்டு மூச்சையும் உள் இழுத்து கொண்டு தன்னுடைய உயரத்தை அளக்க சொன்னார் அப்பொழுது அவருடைய உயரம் 6 அடி 6 அங்குலம் என அளவிடப்பட்டது இதை கண்ட விஞ்ஞானிகள் என்ன கூறுவதென்று தெரியாமல் அவருடைய சக்தியை ஒத்துகொண்டனர்.

      இது நவீனயுகத்தில் நேரடியாக நிருபனமான ஒரு உதாரணம். இதே போல பறக்கும் சக்தியையும் Daniel Dunglas Home நிருபித்து காட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு விடயம். இந்த சக்தியை தான் ESP அதாவது EXTRA SENSORY PRESUMPTION என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குறிபிடுகிறார்கள். வானத்தில் இருந்து 9 சக்திகள் தன்னை இயக்குவதாக சொல்லியிருந்தார். இது மாதிரியான சில சக்திகளை கொண்ட மனிதர்கள் குறிப்பிட்ட வான் சக்தியை பற்றி சொல்லியிருகிறார்கள்.

      அதே போல் அனுமனும் இப்படி பட்ட சக்திகளை பயன்படுத்துவற்கு முன்னால் வானத்தை நோக்கி தியானம் செய்ததாக இதிகாசங்களில் கூறபட்டுள்ளன. இது போன்ற ESP சக்தியை பயன்படுத்தி தான் தன்னுடைய உடலையும, உயரத்தையும் பெரிதாக்கி இருப்பாரோ என்று யோசிக்க தோனுகிறது. ஆனால் Daniel Dunglas Home விட அதி பயங்கர ESP சக்தி இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அப்படிபட்ட சாகசங்கள் எல்லாம் செய்திருக்க முடியாது.

No comments:

Post a Comment