பூமியில் தோன்றும் ஒவ்வொரு உரியினமும் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளின் தகுந்தாற்போல் தங்களுகுலாகவே ஒருவித
மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ளும். இதற்கு மனிதர்களும் விதிவிலக்கு அல்ல.
சிலி நாட்டில் இருக்கும் அட்டகாமா பாலைவனத்தில்
வாழ்கின்ற மக்கள் இயற்கையாகவே ஒரு மாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பகுதியில் Arsenic என்று சொல்லப்படும் கொடிய விசத் தன்மை கொண்ட நீரை குடித்தாலும் இறந்து
போகாத அளவுக்கு அவர்களின் உடல் ஒருவித மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கிடைக்கும் நீரை ஆய்விற்கு
உட்படுத்தப்பட்ட பிறகு, World
Health Organization-ஆல்
குறிப்பிடப்பட்டுள்ள, குடிப்பதற்கு உகந்த நீரின் அளவை விடவும் 1௦௦ மடங்கு
அளவுக்கு, அந்த தண்ணீர் மாசு அடைந்ததை கண்டுபிடித்தனர். இதைத்
தொடர்ந்து அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்ற மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஜீன்களை
ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது Arsenic-ன் விஷத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களின் ஜீன்கள்
கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மற்றம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆயிரம் வருடங்களில் ஏற்பட்டுள்ள
இப்படிப்பட்ட மாற்றங்களில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றமாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment