உலகில் விலகாத விடைகிடைகாத மர்மங்களும், மர்மமுடிசுகளும்,
ஏராளம் இருகின்றன. அவற்றில் பல, கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கிய சூரனாக
திகழ்ந்த மர்மம் தான் பெர்முடா முக்கோணம். மியாமி, பெர்முடா தீவு மற்றும் புய்ரடோ
ரிகாவுக்கு இடையே அமைந்துள்ள மிகப்பெரிய கடல்பரப்புதான் பெர்முடா முக்கோணம்.
இங்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது எதனால் இதை
கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைகின்றன
என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது அதற்கான பதிலைத்தான் அறிவியல்
ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெர்முடா முக்கோணத்தில் மேல் இருக்கும்
மேகங்கள்தான் அங்கு நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர். மேலும் அவற்றை கிள்ளர் க்லவுட்ஸ் என்றும் கூறுகின்றனர்.
பெருமுடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள்
அருங்கோணா வடிவில் அமைந்திருக்கின்றன. மேலும் இங்கு காற்று மணிக்கு 170 மைல்
வேகத்தில் பயணிக்கிறது என்கின்றனர். இதன் காரணத்தால்தான் பெர்முடா முக்கோணப்பகுதியில்
கப்பல் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆயச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெர்முடாபகுதியில் அருங்கோண வடிவில் அமையும் மேகங்கள் ஏறத்தாள 20 முதல் 55 மைல்
தூரம் அகலத்தில் அமைகின்றனர். இவை பெர்முடா முக்கோணத்தின் மேற்கு பகுதியில்தான் பெரும்பாலும்
அமைகிறது. இவ்விடம்தான் மிகவும் அபாயகரமானது என்று மக்கள் கருதி வந்தனர். இங்கு சில
மேகங்கள் நேர்கோடு வழியில் அமைகின்றன. இது அசாதாரணது ஆகும்.
மணிக்கு 170 மைல் வேகத்தில் 40 அடி உயரத்தில் அலைகள் அடித்தால் எப்படி
இருக்கும் அப்படிதான் பெர்முடா பகுதியில் அலைகள் மற்றும் புயல்களின் தாக்கத்தினால்
உருவாகின்றன.
இந்த காரணத்தால் தான் பெர்முடா முக்கோணத்தில் மர்மமான
நிகழ்வுகள் நடந்திருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எது
எப்படியோ, நீண்ட காலமாக விடையின்றி இருந்த நீண்ட மர்மத்திற்கு விடை
கிடைத்துவிட்டது.
பெர்முடா முக்கோணம்ப்ளோரிடா, போர்டேரிகோபெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா, ப்ளோரிடா, போர்டேரிகோ பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு முக்கோண வடிவ கடல் பகுதியாகும்
ReplyDelete