பல மொழிகள் பேசதெரிந்த பலருக்கும், பேசதெரிந்த
மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. இன்னும் சிலர் தங்களது தாய்மொழியை கூட சரிவர
தெரியாமல் உள்ளனர். அனால் பத்து வயதே ஆனா மகமூத் அக்ரம் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த
சிறுவன் 400 மேற்பட்ட மொழிகளை சரளமாக பேசவும் எழுதவும் தவிர 70 மேற்பட்ட மொழிகளில்
தட்டச்சும் செய்கிறார்.
சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் அக்ரம் 4 வயதிலேயே மொழிகளை கற்க தொடக்கி விட்டார். இவரது
தந்தை அப்துல் ஹமீது, பல மொழிகள் அறிந்தவர் இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதை
பார்த்து இந்த சிறுவனும் மிக வேகமாக கற்று கொண்டிருக்கிறான். ஆச்சரியப்பட்ட தந்தை அடுத்தடுத்த
மொழிகளை கற்று கொடுக்க தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு மேல் கற்கும் திறன் அசாத்தியாமான
வேகத்திற்கு சென்றதால், அதிர்ந்த பெற்றோர் இவரின் அறிவாற்றலை பரிசோதனை செய்ய மருத்துவரிடம்
அழைத்து சென்றனர்.
அப்பொழுது அக்ரம் இயல்பான குழந்தை இல்லை என்பது தெரியவந்தது.
அதன் பின்பு அக்ரமின் திறமையை உணர்ந்த பெற்றோர் 5 வகுப்பு வரை பள்ளி பாடங்களோடு மொழிகளையும்
கற்று வந்த அக்ரமை வழக்கமான கல்வியில் இருந்து விளக்கி மொழியியலில் மட்டும் கவனம்
செலுத்த அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அக்ரமின் சாதனைக்கு உறுதுணையாக இருந்து
இன்றுவரை 400 மேற்பட்ட மொழிகளை கற்றுகொடுத்துள்ளார் அவரின் தந்தை அப்துல் ஹமீது.
அக்ரம் தன்னுடைய 4-வது வயதில் முன்முதலில் எழுதிய எழுத்து திருவள்ளுவர்
தன் கையாள் எழுதிய தமிழ் எழுத்து என்றும். மேலும் இவர் 400 மொழிகளில் தனக்கு பிடித்த மொழி தமிழ் மொழிதான்
என்றும் பெருமையுடன் கூறிகொள்கிறார். அறிவுதிறனில் உலகின் மிகப்பெரிய செல்வந்தரான பில்கேட்ஸ்க்கு
இணையாக திகழும் இந்த சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
யுனிக் வேர்ல்ட் ரெகார்ட் நிறுவனம் 2014-ம் ஆண்டிற்கான WORLDS YOUNGEST MULTI LANGUAGE TYPIST என்ற விருதை இவருக்கு வழங்கி இருக்கிறது. மேலும் 75 நிமிடங்களில் 20 மொழிகளில்
இந்திய தேசிய கீதத்தை எழுதி முடித்ததன் மூலம் INDIAN ACHIVERS BOOK OF RECORDS விருதையும்
பெற்றிருக்கிறார். இந்த சாதனையை சரிபாற்பதற்கே மூன்று மாதங்கள் எடுத்து கொண்டது. 400 மொழிகளையும் முழுமையாக பரிசோதிக்க கூடியவர்கள் கிடைக்காமல்
கின்னஸ் சாதனை இன்னும் தள்ளிக்கொண்டு போகிறது என்றும், மேலும் தான் ஒரு மொழி
வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்றுத்தர வேண்டும் என்பதே தனது
குறிக்கோள் என்றும் அக்ரம் பெருமையுடன் கூறுகின்றார்.
No comments:
Post a Comment