Saturday, 26 May 2018

பூச்சிகளை வளர்த்த பூச்சிகொல்லி மருந்து


   நமது மூதாதையர்களின் வேளாண்மை சுய சார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஊரு விளைவிக்காமல், தங்களின் உணவுத் தேவையை நிவர்த்தி செய்து வந்தனர். தொழிற் புரட்சிக்குப் பின்பு உலகெங்கும் காடுகள் ஒருபுறம் அளிக்கப்பட்டன. பசுமைப் புரட்சி என்ற பெயரால் அதிக விளைச்சல், அதிக லாபம் என்ற கவர்ச்சிகள் வேளாண்மையில் திணிக்கப்பட்டன. “அதிக விளைச்சலுக்கு எதிரி” என்ற முத்திரையுடன் பூட்சிகளுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டங்கள் அங்கு தான் தொடக்கி வைக்கப்பட்டது.

  உலகப் போர்களில் மனித உயிர்களைக் கொள்வதகாக வைக்கபட்டிருந்த வெடிமருந்து மூலபொருகளில் இருந்து தான் செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் தயாரிக்கப்பட்டன. இந்த பூச்சிக்கொல்லிகள் பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளைக் கொள்வதை விட, வேளாண் விளைபொருட்களை உண்ணும் மனிதரை மெல்லக் கொள்ளும் விஷமாக மாறிவிட்டதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவருகிறது. இப்படி உயிர்க்கொல்லிகளாக உருவெடுத்திருக்கும் பூச்சிகொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தவும் முடியாமல், கைவிடவும் வழியின்றி இன்றைய விவசாயிகள் தடுமாறுகிறார்கள்.

   மனிதர்களை விட பரிமாணத்தில் பல மடங்கு மூத்தவை பூச்சி இனங்கள். அளவில் சிறிதானாலும் பூச்சியின் உருமாற்றம், இனப் பெருக்கம் என அவற்றின் பிரம்மாண்ட உலகு விசித்திரமானது முட்டை, புழு, கூடுபுழு, தாய்ப்பூச்சி, என நான்கு உருமாற்ற நிலைகளை கொண்டது பூச்சியின் வாழ்கை சுழற்சி.

  அவை அடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டும் போது, அவற்றை அழிப்பதற்கு முன்பைவிட வீரியமான பூச்சிக்கொல்லிகள் அவசியமாகிறது. பூச்சி இனங்கள் என்றாலும் முட்டைகளின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த முட்டைகளில் இரண்டு சதவீதம் மட்டுமே முழு பூச்சிகளாகின்றன. பூச்சிகொல்லி பயன்பாட்டால் பயன்பாட்டால் முட்டைகள் அனைத்தும் பூச்சி ஆகும் சதவீதம் அதிகரித்து வருகின்றது.

   பூச்சிக்கொல்லிகள் பயன் அளிக்காததற்கு எளிமையான உதாரணம், நாம் பயன்படுத்தும் கொசுவிரட்டி மருந்துகள். கொசுக்களை அழிக்காமல் அவற்றை விரட்ட மட்டுமே செய்யும் இந்த வேதிப் பொருட்களால். அவை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்ட 75 ஆண்டுகளில் கொசுக்களின் எதிர்ப்புத்திறன் கூடிக்கொண்டே செல்வது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கேற்ற கொருசுவிரட்டி மருந்துகளின் நச்சு வீரியத்தை அதிகரித்து வருகின்றார்கள். இதன் விளைவாக கொசு மட்டுமன்றி மேலும் பல பூச்சி இனங்களின் எதிர்ப்புத் திறன் வளர்க்கப்பட்டு விட்டது என்று ஆராய்ச்சி முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது.

No comments:

Post a Comment