தென்கம்மல் என்ற கிராமம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உள்ளது. இங்குதான் இந்த வினோத பழக்கமும் உள்ளது. மும்பையில் இருந்து 150 கி.மீ. தொலைவில்தான் அமைந்திருகிறது இந்த கிராமம். இந்த கிராமம் முழுவதும், மொத்தமே 5௦௦ பேர்தான்
வாழ்ந்து வருகின்றனர். ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்வது குற்றம் என
இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. விவாகரத்து அல்லது இறப்பு நேரிடும் போது
மறுதிருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் தென்கம்மல் கிராமத்தில்
முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே 2, 3, திருமணங்கள் செய்து
கொள்கின்றனர். 2 3 திருமணம் செய்தாலும் கூட அந்த பெண்கள் ஒற்றுமையாக தான்
உள்ளனர். இவர்கள் இப்படி பல திருமணங்கள் செய்யக் காரணம் தண்ணீர் தான்
என்றால் உங்களால் நம்பமுடிகிறதா. ஆம் நம்பிதான் ஆகவேண்டும்,
குடும்பத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வருவதற்காகவே இவர்கள் 2 3
திருமணங்கள் செய்கின்றனர். இவர்களை THE WATER WIFE என அழைகின்றனர்.
மகாராஷ்டிராவில் மட்டுமன்றி இந்தியாவில் பல கிராமங்களில் வறட்சியே நிலவுகிறது. அதில் தென்கம்மல் கிராமமும்
ஒன்றுதான். ஆனால் இவர்கள் தண்ணீர் கொண்டு வரவேண்டுமென்றல் பல மைல் தூரம்
நடந்து எடுத்து வரவேண்டிய கட்டாயம் உள்ளது. தென்கம்மல் கிராமத்தில்
கோடைகாலம் மிகவும் கொடுமையாக இருக்கும். கிணறுகள் முற்றிலும் வற்றிவிடும்.
கால்நடைகள் வறட்சி தாங்காமல் இறந்துவிடும்.
இதற்கெல்லாம் மேலாக இந்த கிராமம் மற்ற கிராமங்களுடன் இணைப்பில் இல்லாமல்
தனிமையாக உள்ளது. இதனால் கிணறுகள் கோடை காலத்தில் வற்றிவிட்டால் இவர்கள் பல
மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டும். ஏறத்தாள இவர்கள் 15 லிட்டர் தண்ணீர் எடுத்து வர 12 மணி நேரம் செலவிடவேண்டி உள்ளது.
சகாரா பகத் என்பவருக்கு முதல் மனைவி மூலம் 6 குழந்தைகள் உள்ளது. இவரது
முதல் மனைவிக்கு வீட்டை பாதுகாக்கவும் குழந்தைகளை காக்கவுமே நேரம் சரியாக
போய்விடுகிறது. இதுதவிர ஒரு நாள் செலவு செய்து தண்ணீர் கொண்டு வரமுடியாமல்
போவதால் சகாரா பகத் வீட்டுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வரவே இரண்டு
திருமணம் செய்துள்ளார். இந்த கொடுமை இந்த கிராமம் மட்டுமே இல்லாமல்
இந்தியாவில் வேறு சில கிராமங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது
அநியாயத்தின் உச்சகட்டம் தானே. ஒரு பெண் என்பவள் பெரும்சக்தி, அவளை
ஒருகுடம் தண்ணீர் மட்டுமே எடுத்து வருவதற்காக திருமணம் செய்வது முற்றிலும்
தவறான செயல்.
எத்தனையோ
திட்டங்கள் எத்தனையோ மாற்றங்கள் என இந்நாட்டில் வந்து சென்றாலும்
அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும்
கொடுமைகளுக்கு தீர்வும் தட்டி கழிக்கபட்டே வருகின்றன.
No comments:
Post a Comment