Tuesday, 12 June 2018

35 ஆண்டுகளுக்கு பின் தரை இறங்கிய விமானம்


   20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த நாளில் இருந்து தான் பயணங்கள் வேகமாகவும், எளிதாகவும் இருந்தது. விமானப்போக்குவரத்து ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து. பல விபத்துகள், வினோதமான நிகழ்வுகள், மற்றும் மர்மமான முறையில் விமானங்கள் காணாமல் போவது போன்ற நிகழ்வுகள் ப்பொழுது வரை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

   1980 ம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ ஆலக்ரிட் என்ற விமான நிலையத்திற்கு 1950 வருடத்தை சேர்ந்த ஒரு விமானம் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல், விமான கட்டுப்பாட்டின் அனுமதியும் பெறாமல் தரை இறங்கியது. விமானம் தரை இறங்கிய பிறகு நீண்ட நேரம் ஆனபிறகும், அதில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விமான நிலைய நிர்வாகத்தினர். பாதுகாவலரின் உதவியோடு விமானத்தின் கதவுகளை திறந்தனர்.

   உள்ளே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, உள்ளே வெறும் மனிதர்களின் எலும்பு கூடுகள் குவிந்து கிடந்தது. விமானத்தை ஆராச்சி செய்து பார்த்ததில், இந்த விமானம் 1954 ம் வருடம் வெஸ்ட் ஜெர்மனியை சேர்ந்த ஹெட்ச் என்ற விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலும் குழப்பம் அடைந்த விமான நிலைய வல்லுனர்கள் இந்த நிகழ்வுக்கான தெளிவான காரணம் என்று எதுவும் கூறவில்லை. இந்த விமானத்தை பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த அரசாங்க அதிகாரிகள் கூட சரியான விளக்கத்தை கொடுக்க முடியவில்லை.

   இந்த செய்திக்கு பின்னால் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எப்படி இந்த விமானம் குறைந்த எரிபொருளை வைத்து 35 வருடங்கள் பறந்திருக்க முடியும். இந்த விமானத்தில் யாருமே உயிருடன் இல்லாத போது விமானத்தை யார் இயக்கியது. சாண்டியாகோ ஏர்லைன்ஸ் க்கு சொந்தமான விமானம். இந்த விமான நிறுவனம் 1956 ம் ஆண்டு ஏற்பட்ட நஷ்ட்டத்தின் காரணமாக தனது விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தி விட்டது. அதற்கு பின்னால் மறைந்த இந்த விமானத்தை பற்றிய தகவல்களை பெற முடியாமலேயே போயிற்று.

No comments:

Post a Comment