Friday, 1 June 2018

கடலில் 5௦ வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் கப்பல்


     1748-ம் ஆண்டு LADY LOVIBOND கப்பல் CAPTION சைமன் தன் மனைவியுடன் லண்டன் நகரத்தில் இருந்து போர்ச்சுகல் நோக்கி பயணம் செய்தார். பயணத்தின் போது CAPTION மனைவியின் மேல், CAPTION-க்கு அடுத்த நிலையில் உள்ள ஜான் ரிவேர்ஸ்க்கு காதல் ஏற்பட்டதாக கூறபடுகிறது. ஆனால் CAPTION மனைவி அந்த காதலை நிராகரித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஜான் ரிவேர்ஸ், விபத்துகள் நிறைந்த பகுதிக்கு வேண்டுமென்றே கப்பலை செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார்.

   இதனால் இந்த கப்பலில் பயணம் செய்த அனைவரும் மரணத்தினர் என்றும் கருத்துகள் நிலவுகிறது. இதன் பிறகு தான் ஒரு சுவாரஸ்மான நிகழ்வு நடக்க ஆரம்பித்துள்ளது. LADI LOVIBOND கப்பல் விபத்துக்குளாகி 50 வருடங்கள் கழித்து விபத்துக்குள்ளான அதே நாளில் அதே இடத்தில் அதே நேரத்தில் மறுபடியும் அந்த கப்பல் தோன்றியுள்ளது. 1848-ம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்த கப்பல் தெரியும் போது அதை அருகில் சென்று பார்க்கும் போது கப்பல் காற்றில் மறைந்து விட்டது எனவும் ஒரு கதை சொல்லபடுகிறது.

   இதன் பிறகு LADY LOVIBOND கப்பல் 1898, 1948, மற்றும் கடைசியாக 1998-ம் தென்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு இந்த பேய் கப்பல் தென்பட்ட பொழுது அந்த பகுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் பார்த்ததாக கூறுகின்றனர். அடுத்ததாக இந்த கப்பல் 2048-ம் ஆண்டு தென்படும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. LADY LOVIBOND கப்பல் இருந்ததும் அந்த கப்பல் 1848-ம் ஆண்டு விபத்துக்குள்ளானதும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்து போனதும் உண்மை.

   ஆனால் விபத்துக்குளான அந்த கப்பல் 50 வருடங்களுக்கு ஒரு முறை மீண்டும் தோன்றுவதாகவும் கூறப்படுகிற தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று கூறமுடியவில்லை. சிலர் இதை ஒரு கற்பனை கதை என்றும் கூறுகின்றனர். இந்த மாதிரியான விவாதங்களையும் தாண்டி LADY LOVIBOND கப்பல் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றது.

No comments:

Post a Comment