நாம் வாழும் இந்த பூமியானது 365 நாட்களும்
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது, இதனால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்று அனைவரும் அறிந்த விஷயம்தான்.
ஆனால் இந்த பூமி திடிரென சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்று நாம்
எப்பொழுதாவது கற்பனை செய்து பார்த்திருப்போமா. ஒரு வேலை அப்படி நடந்தால் என்ன ஆகும் என
இப்பொழுது பார்க்கலாம்.
மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மணிக்கு
சுமார் 1670 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றும் பூமியானது, திடிரென சுழற்சியை நிறுத்தும் போது பூமியுடன் உறுதியாக பினைக்கபடாத அத்தனை
பொருட்களும் மற்றும் உயிரினங்களும் சுமார் 1670 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கு நோக்கி
வீசிஎரியப்படும். அதாவது ஒரு நிமிடத்திற்கு 28 கிலோமீட்டர் வேகத்திலும், ஒரு வினாடிக்கு சுமார் 5௦௦ மீட்டர் வேகத்திலும் இந்த நிகழ்வானது ஏற்படும்.
கடல்நீரும் பூமியுடன் உறுதியாக
பினைக்கபட்டிருக்கவில்லை எனவே பூமி திடிரென சுழல்வதை நிறுத்துவத்தால் ஏற்படும்
மிகப்பெரிய அளவிலான சுனாமியானது சுமார் 1670 கிலோமீட்டர் வேகத்தில் 28
கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள்
மூழ்கடித்துவிடும் அளவுக்கு மிகப்பெரிய சுனாமியாக இருக்கும். இதனால் நிலத்தில்
வாழும் ஒரு உயிர் கூட மிஞ்சமுடியாது.
பூமி தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்தின
போதிலும் சூரியனை சுற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே
வருடத்தில் 6 மாதம் இருளிலும் மீதம் 6 மாதம் பகலிலும் இருக்கும். இதனால் ஒரு
வருடத்தில் உள்ள 365 நாட்களும் ஒரேஒரு நாளாக மாறிவிடும்.
தொடர்ந்து 6 மாதமாக
சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து பாலைவனமாகவும், தொடர்ந்து 6 மாதமாக இருளில் இருக்கும் பகுதிகள் பனிபொழிவு அதிகரித்து பனிபிரதேசமாகவும்
மாறிவிடும்.
இந்த சூழ்நிலை மாற்றத்தை தாங்க முடியாமல்
நுண்ணுயிரிகள் கூட முற்றிலுமாக அழிந்து விடும். சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில்
மறைவதற்கு பதிலாக, மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும் நிலை ஏற்படும்.
இது மட்டுமில்லாமல் இந்த வினோத நிகழ்வு ஆண்டு ஒருமுறை மட்டுமே நிகழும்.
பூமி திடிரென சுழற்சியை நிறுத்துவதால்
வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிகப்பெரிய
அனுகுண்டின் வெடிப்பினை விட பல மடங்கு வலிமையானதாக இருக்கும். இதனால் மிகப்பெரிய
மற்றும் மிகஉறுதியான கட்டிடம் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போய்விடும்.
பூமி தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த
நொடியே, பூமியை சுற்றியுள்ள காந்த மண்டலம் செயலிழந்து
போய்விடும். இதனால் சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்களினால் பூமியில்
உள்ள மீத உயிர்களும் அழிந்துவிடும். எனவே,
நாம் வாழும் இந்த பூமியானது நீர், நிலம், காற்று இல்லாமல் நமக்கு தெரியாத ஈர்ப்பு விசை, காந்த மண்டலம் மற்றும் பூமியின் சுழற்சி போன்றவற்றை கொண்டு இன்றுவரை நம்மை
அழிவில் இருந்து இயற்கையாகவே நம்மை பாதுகாத்துவருகிறது என்பதே உண்மை.
No comments:
Post a Comment