Sunday, 3 June 2018

தானாக தீப்பற்றி எரியும் மனிதர்கள்


   மனித உடலில் எதிர்பாராத வேதியல் வினை மூலமாக ஏற்படுகிற ஒரு மோசமான நிகழ்வுதான் HUMAN COMBUSTION. இந்த HUMAN COMBUSTION ஆல் பாதிக்கப்பட்டவர்களின் உடல் தானாகவே தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விடுகிறது. இந்த காரணத்தால் இறந்தவர்களின் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.


   இந்த HUMAN COMBUSTION-னால் பாதிக்கப்பட்ட முதல் நபர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போலோநோஸ் என்ற இத்தாலியை சேர்ந்த ஒரு படைவீரர். இவர் பலரின் கண்முன்னே எரிந்து இறந்துள்ளதாக கூறுகின்றனர். அடுத்ததாக 19-ம் நூற்றாண்டுகளிலும், 1951, 1966, 1986 போன்ற ஆண்டுகளிலும் சில தகவல்கள் பதிவாகியுள்ளது. கடைசியாக HUMAN COMBUSTION சம்பந்தமாக பதிவுகள் கடந்த 2010-ம் ஆண்டு பதிவாகியுள்ளது. இந்த பதிவின் படி 75 வயது மதிக்கத்தக்க மிசேல் பார்த்தி என்ற பெண்மணி தனது வீட்டில் இருக்கும் போது தானாகவே தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளார். வீட்டில் இருந்து வரும் புகையை பார்த்து, பக்கத்தில் வசிபவர்கள் பார்ப்பதற்குள் முழுவதுமாக எரிந்து விட்டார் என்று தகவல் தெரிவித்தனர்.


   இந்த மாதிரியான நிகழ்வு இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் சென்ற ஆண்டில் ராகுல் என்ற சிறுவனின் உடல் அடிகடி திடீர் என்று தானாகவே தீபற்றி எரிகிறதாக ஒரு தகவல் பரவ ஆம்ரபித்தது. இதனால் அந்த குழந்தையின் உடலில் நிறைய மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டது. இதுவும் ஒரு HUMAN COMBUSTION மாதிரியான ஒரு நிகழ்வு தான், இல்லை வேறு எதாவது காரணமாக இருக்குமா என்று ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்படும் முன்பே அந்த குழந்தை இறந்துவிட்டது. இந்த HUMAN COMBUSTION-க்கு முன்வைக்கபடுகிற ஒரு முக்கியமான விஷயம் ஆல்ககால்.


   பொதுவாகவே மனிதனின் உடலில் 0.02 ML என்கிற மிக சிறிய அளவுக்கு ஆல்ககால் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த அளவு மிக அரிதான வகையில் ஒரு சிலருக்கு மட்டும் அளவுக்கு அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதகாவும் அப்படி அளவுக்கு மீறும் பட்சத்தில் மேற்கொண்டு அவர்கள் ஆல்ககால் எடுத்துகொள்ளும் போது ஏற்படுகிற எதிர்பாராத கெமிக்கல் ரியாக்சன் மூலமாக தான் இந்த HUMAN COMBUSTION ஏற்படுகிறதாக கூறுகின்றனர். இந்த HUMAN COMBUSTION-னால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் ஏன் தொடர்ந்து எரிய ஆரம்பமாகிறது என்றால் VICK EFFECT  என்ற ஒரு தியரியை முன்வைக்கிறார்கள்.


       VICK EFFECT தியரியின்படி கெமிக்கல் ரியாக்சன் மூலமாக ஒருவரின் உடல் அதிக அளவில் சூடாகும் போது முதலில் அவர்களின் கொழுப்பு பகுதி முதலில் கரைய ஆரம்பமாகும். அப்படி ஆரம்பமாகும் போது, உருகிவர கொழுப்பின் காரணமாகவும் தொடர்ந்து அதிகமாகும் வெப்பத்தின் காரணமாகவும், அவர்கள் உடுத்தி இருக்கும் உடை மேலுவர்த்தியின் திரி போன்று செயல்பட்டு அந்த கொழுப்பையும் அதோடு சேர்ந்து உடலையும் எரிய வைக்கிறதாக ஆராய்ச்சியின் முடிவில் வெளியிட்டு அதற்கு VICK EFFECT என்று பெயர் வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment