பொதுவாக கடல் நீர் சுத்திகரிப்பு என்பது வரவை
விட செலவு அதிகமாக இருக்கும் என்பது தான் உண்மை. மக்களுக்கான அடிப்படைத்
தேவைகளுக்கு கணக்கு பார்க்ககே கூடாது என்பதால் அந்த விமர்சனத்தைத் தவிர்த்துவிடலாம்.
கடல்நீரை குடிநீராக மாற்றும் நிலையங்களை அமைக்கும் போது முறையாக இடத்தை தேர்வு
செய்வதும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், கடல் உயிரின பாதுகாப்பை
உறுதி செய்வதும், அவசியம் என்கிறது கலிபோர்னியா கடலோர கமிஷன்.
கடலில் இருந்து நீரை குழாய்கள் மூலம் கடும்
விசையுடன் இழுக்கும் போது. கடல் வாழ் உயிரினங்கள் இறக்கின்றன.
இது தவிர, ப்ளாங்க்டான், லார்வா, மீன் முட்டைகள் என நுண்ணுயிரிகள் நீரின் விசை
மற்றும் அழுத்தத்தால் கொல்லப்படுகின்றன. கடல் மட்டத்தில் இருந்து சூரியக் கதிர்கள்
ஊடுருவும் 2௦௦ மீட்டர் ஆழம் வரையில் வசிக்கும் பெரிய உயிரினங்கள், முக்கிய மீன்
வகைகள் எப்போதும் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப நகர்ந்து கொண்டே இருக்கும். இது தவிர மிக
முக்கியமாக கடலின் நீரோட்டம் இதனால் பாதிக்கபடுகிறது.
உப்புத்தன்மை அதிகமான கலைவை கடலில் கொட்டுவதால்
உயிரினங்கள் முற்றிலும் அழியாது என்றாலும் கூட இடம் பெயர்ந்துவிடும். அல்லது அதன்
மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைந்துவிடும். கடந்த 1௦
ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மீனின் உடல் அளவும் எடையும் தற்பொழுது பாதியாக
குறைந்து விட்டது.
முதலில் கடல் நீரை சுத்திகரிப்பது என்கிற கூற்றே
தவறு தான். மழையை உள்வாங்கி ஆறுகளை உற்பத்தி செய்யும் சோலைக்காடுகளை சுற்றுலா
என்னும் பெயரில் அழிகின்றோம். அங்கிருந்து தரைபகுதிக்கு இறங்கி வரும் ஆற்றில்
கழிவுகளை கொட்டுகிறோம். அடுத்ததாக கடலையும் இப்பொழுது விட்டுவைக்க வில்லை. தமிழகத்தில்
ஆண்டுக்கு சராசரியாக பொழியும் 9௦௦ மி.மீட்டர் மழையை முறையாக பாதுகாத்து. இருக்கும்
நீர்நிலைகளை பாதுகாத்தாலே போதும். குடிநீர் தேவைக்காக மாற்று வழியை நாட வேண்டிய அவசியம்
இருக்காது. மொத்தத்தில் கடல் நீர் பயன்பாடு என்பது வெற்றிகரமாக, ஆரோக்கியமான,
சுற்றுசூழலுக்கு உகந்த திட்டம் அல்ல என்கிறார்கள். சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment