Tuesday, 26 June 2018

ராமர் பாலத்தின் அறியாத தகவல்கள்


    ராமாயணத்தில் ராமசேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று போக்கிசம்தான் ராமர்பாலம், இதை இன்னும் பலர் உண்மையா அல்லது பொய்யா என விவாதித்து கொண்டு இருக்கையில், ஆம் ராமசேது உண்மைதான் இது வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள்.
    இன்றைய உயர்தரமான தொழில்நுட்பங்களை வைத்துக்கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் 5 நாட்களில் கட்டி முடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிடகலையிலும், தரத்திலும், அப்பொழுதே மிகசிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கான ஆதாரங்கள் இருகின்றன. அதற்கு நமது தஞ்சை பெரிய கோவில் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.
    ராமாயணம் அறிந்திருப்போம், ராமபுராணம் மற்றும் ராமசேது எப்படி கட்டப்பட்டது என பலவனவற்றை அறிந்துவைத்திருப்போம். ஆனால் அந்த கட்டுமானத்தில் உள்ள பல வியக்கத்தக்க விசயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா. எண்ணற்ற அதிசயங்கள் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது ராமசேது.
    ராமர் சேதுபாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது ராவணனிடம் இருந்து சீதையை மீட்க ராமர் சொல்லும் போது, அவர் கடல் கடந்து செல்ல வாரணங்கள் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும். வெறும் 5 நாட்களில் 1 கோடி வானரங்களின் உதவியோடு நளா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டதின்படி கட்டிமுடிக்கப்பட்டது ராமர்சேதுபாலம்.
    அகழ்வாராய்ச்சியின் கூற்றின்படி ராமர்சேதுபாலத்தின் வயது 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறுகின்றனர். ராமர்சேது பாலத்தை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டதட்ட 30 கிலோமீட்டர் நீளமும் 3 கிலோமீட்டர் அகலமும் கொண்டது ராமர்சேதுபாலம் என கூறப்படுகிறது. இதை வெறும் 5 நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான  விஷயம்தான்.
     ராமர்பாலம் தனுஷ்கோடி தீவில் தொடங்கி இலங்கையில் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுதியில் கடல்மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டத்தட்ட 10 மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலில் ஆழம் உள்ளதாக கூறுகின்றனர். மிதக்கும் கற்களை பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாகத்தான் இருக்கிறது. இது விஸ்வகர்மா இனத்தை சேர்ந்த நளா மற்றும் நீலின் கைதரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றது என சில புராணங்கள் கூறுகின்றன.
     ஆனால் கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சில அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும், அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். ராமசேதுவில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல புவியியலாளர்கள் ராமசேது இயற்கையாக உருவானது அல்ல இது மனிதனால் கட்டப்பட்டதுதான் என கூறுகின்றனர். ராமாயணம் மட்டுமல்லாமல் பல கூற்றுகள் இதை உண்மை எனதான் சொல்கிறது.
    ராமாயணத்தில் சொல்லப்பட்டது போலவே மிகசரியான இடத்தில் ராமர்பாலம் இடம்பெற்றுள்ளது. அதனால் ராமாயணம் சொல்வதும் உண்மைதான். ராமசேது கட்டப்பட்டு ஏறத்தாள 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. கடந்த 1480 கி.முவில் கடலில் ஏற்பட்ட ஒரு சூராவளியால் ராமர்பாலம் அழிந்து விட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே 1480 கி.முக்கு முன்பு வரை ராமசேது பாலம் பயன்பாட்டில்தான் இருந்திருக்கிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகபடுத்தியுள்ளனர்.
    நாசா விண்வெளி ஆய்வுமூலம் தனது செயற்கைகோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தை கொண்டு ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது ராமர்பாலம் வெறும் மணல்திட்டுகள் அல்ல மற்றும் இது வெறுமென கற்களை தூக்கிவீசி  கட்டியவாறு இல்லை. மிகசரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் ராமசேது பாலம் என கூறுகின்றனர்.

No comments:

Post a Comment