இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில்
இருக்கும் 285.2 ஏக்கரில் அமைந்துள்ள
ஒரு சிறிய தீவுதான் இந்த கட்ச தீவு. பறவைகளுக்கு உணவு தரும் செடி கொடிகள்,
மருத்துவ குணம் கொண்ட
அபூர்வ மூலிகை செடிகள். பச்சை நிறம் கொண்ட அபூர்வ ஆமைகள் அதிகம் உண்டு இந்த
ஆமைகளுக்கு கட்ச என்ற
மற்றொரு பெயர் இருப்பதால் தான் இந்த தீவுக்கு கட்ச தீவுனு பெயர் வந்தது.
சங்கு, பவளம், முத்து, விலை உயர்ந்த இறால்கள் போன்றவை கிடைக்கும் இந்த கட்ச தீவில்
மீன் வளங்களும் அதிகம் உண்டு. மேலும் சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தபடும் மூலப்பொருளான கால்சியம்
கார்போனேட் நிரம்பிய ஓடுகள்,
மற்றும் சுண்ணாம்புக்
கல் இந்த
கட்ச தீவில் அதிகம் கிடைக்கும். இது அனைத்தையும் தாண்டி எண்ணெய் வளம் கச்சத்தீவில் அதிகமாக உள்ளது என்று சோவியத்
யூனியனின் ஆய்வு
முடிவில் கூறியுள்ளனர். மற்றும் ராணுவ ஏவுகணை தலங்களுக்கு சிறந்த இடம் இந்த கட்சத்
தீவு. மேலும் நீர்
மூழ்கி கப்பலுக்கான பயிற்சி
காலம், ராணுவ போர்
விமானங்கள் இறங்குவதற்கான திட்டு, போன்றவற்றை கச்சத்தீவில்
சிறந்த முறையில் ஏற்படுத்த முடியும். இப்படி அதிகமான பெருமையை தனக்கு
என்று ஏற்படுத்திக் கொண்ட கச்சத்தீவின் மீது இலங்கைக்கு ஆசை வருவது ஆச்சரியம்
அல்ல.
1974 வது வருடம் வரை இந்தியாவின்
கட்டுப்பாட்டில் இருந்த இந்த கட்சத் தீவு இப்பொழுது இலங்கைக்கு சொந்தமாக
தாரைவார்க்கப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு கச்சத்தீவு
இருந்ததாக அன்றைய காலத்து செப்பேடுகள் கூறுகின்றனர். இந்திய கிழக்கிந்திய
கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் வந்த பொழுது கூட விக்ட்டோரிய மகாராணி கட்சத்
தீவை ராமநாதபுரம்
ஜமீனுக்கு உரியது
என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்கள். 1972ம் வருடம் ராமநாதபுர வருவாய் துறை
வெளியிட்ட தகவல்களின் படி ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவில் இந்த கட்சத்தீவு உள்ளது. இதை
ஜாமின் ஒழிப்புக்கு முன்னாள் ராமநாதபுரம் அரசர் தனிநபருக்கு குத்தகைக்கு விட்டு
இருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின்
கர்ண அதிகார எல்லைக்கு உட்பட்ட இத்தீவின் சர்வே என் 1250, இப்படி கட்சத்தீவு இந்தியாவுக்கு
சொந்தமானது தான் என்று கூற நம்மிடம் வலுவான ஆதாரங்கள் இருந்ததால் 1949
ல் இந்திய
தன்னுடைய கப்பல் படை பயிற்சி மையத்தை கட்சத்தீவில் அமைக்க முற்பட்டது. ஆனால் இலங்கை கட்சத்தீவு
எங்களுடையது என்றும், கட்சத்தீவில் எந்த
ஒரு பயிற்சி மையமும் அமைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தது. இந்த
பகிரங்க எச்சரிக்கையை கேட்டபின்பும், அப்பொழுது பாரத பிரதமராக இருந்த ஜவர்கர்லால் நேரு இதற்கு எந்த பதிலடியும் கொடுக்காதது
இலங்கைக்கு இன்னும் சாதகமாக அமைந்ததது.
அடுத்து 1956ல் இலங்கை தனது ராணுவத்தை கட்சத்தீவில் வைத்து
பயிற்சி தருவதாக ஒரு செய்தி வெளியானது. இதற்கு பதில் சொன்ன பிரதமர்
நேரு. கட்சத்தீவு இந்தியாவின் வசம் உள்ளது தான் என்று சொல்ல நம்மகிட்ட எந்த
ஒரு ஆதாரமும் கிடையாது. மேலும் இந்த ஒரு சிரியத்தீவுக்காக, இலங்கை போன்ற பக்கத்து நாட்டுடன்
யுத்தம் எல்லாமல்
செய்ய முடியாது என்று அலட்சிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது முடிந்து 1968
ல் இந்திரா
காந்தி பிரதமராக இருக்கும் போது இலங்கை கட்சத்தீவை முழுவதுமாக
ஆக்கிரமித்தது என்று செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து
நாடாளுமன்றத்தில் அமளியும் வெடித்தது. ஆனால் அப்போது இந்திரா காந்தி, தானுடைய அப்பா என்ன சொன்னாரோ அதையேத்
தான் வழிமொழிந்தார்.
கட்சத்தீவு இந்தியாவுடையது என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை என்றும், அருகில் இருக்கும் நாடுகளை பகைத்துக்
கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.
1974-ல் தமிழக அரசின் சார்பில் அறிக்கை ஓன்று சமர்ப்பித்தது. அதில்
கட்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானதுதான் என்றும். கட்சத்தீவை
இலங்கைக்கு கொடுத்தால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை
கேள்விக்குள்ளாகும் என்று தெரிவித்தது. இருந்தாலும் அதேவருடம் ஜூன் 27 ம் தேதி கட்சத்தீவுவை இலங்கைக்கு
தாரைவார்க்கும் ஒப்பந்தத்தில் பாரத பிரதமர் இந்திராகாந்தியும் இலங்கை அதிபர் ஸ்ரீ ம பண்டார நாய்க்கும் கைய்யெழுத்திடடார். இந்த
ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாலும் கூட, கட்சத் தீவில், மீன் பிடிப்பதற்கும்,
வலைகளை
காயவைப்பதற்கும் தமிழக மீனவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக ஒப்பந்தத்தில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இருந்தாலும் இங்கு மீன்பிடிக்க சென்ற
இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் படையினரால் தாக்கப்பட்டுத்தான் வருகின்றனர். எல்லை
தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். இதனால் கட்சத்
தீவு முழுவதும்
இலங்கைக்கே சொந்தமானது என்றும் கட்சத் தீவுவில் இந்திய மீனவர்கள் மீன்
பிடிக்க தடை என்றும் இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
No comments:
Post a Comment