Monday, 4 June 2018

ஸ்விஸ் வங்கி கணக்கு தொடங்குவதற்கான தகுதிகள்


   ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் சர்வாதிகாரர்களின், கருப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கம் சுவிஸ் வங்கி. இதற்கு காரணம் வங்கியின் ரகசியத்தை பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம்.

        18 வயது பூர்த்தி அடைந்த எந்த நாட்டவரும் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம். 101 நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவது அவ்வளவு எளிதானதல்ல. புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் இந்த வங்கி எச்சரிக்கையாக இருக்கிறது. ஆனால் பல கோடிகளை கொட்டும் நபருக்கு இந்த கேடுபிகள் எதுவும் கிடையாது. கணக்கை தொடங்கிக் கொடுப்பதற்காகவே பல நிறுவனங்கள் இடை தரகர்களாக செயல்படுகின்றன.

    வங்கி கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உள்ள தேவைகள், பணம் பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படும் என்பன போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க பாஸ்போர்ட் இருந்தால் போதும். இருப்பிடத்தை உறதி செய்ய சமீபத்திய டெலிபோன் பில், மின்சார ரசீது போன்றவற்றில் ஒன்றை கொடுக்கலாம். கணக்கு தொடங்கும் நபரின் பொருளாதார பின்னணி, பணம் வரும் விவரம், அதற்கான ஆவணம் ஆகியவற்றறை கொடுக்க வேண்டும்.

    கொடுக்கும் விவரம் உண்மையானதாக இருக்க வேண்டும். அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். நேரில் சென்று கணக்கை தொடங்குவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். நேரில் செல்ல இயலவில்லை என்றால் தபால் மூலம் பாஸ்போர்ட்டை அனுப்பி கணக்கை தொடங்கலாம்.

   கணக்கு தொடங்க குறைந்தபட்சம் 5௦௦ சுவிஸ் பிராங்க் இருந்தால் போதும். ஆனால் சில வங்கிகள் 10 லட்சம் சுவிஸ் பிராங்க் டெபாசிட் செய்ய வேண்டும். 10 லட்சம் என்பது நம்மூர் பணத்துக்கு கிட்டத்தட்ட 53 கோடி ரூபாய் ஆகும்.

   சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் கிடையாது. சுவிட்சர்லாந்து 15௦5-ம் ஆண்டு முதல் எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளது. சுவிஸ் தன்னுடைய பணப்பரிமாற்றத்துக்கு தங்கத்தை பின்னணியாக கொண்டுள்ளது. உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பை கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது. இன்டெர்நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்றவற்றால் சிறப்பான வங்கி சேவையை வழங்குகிறது. வாடிக்கையாளர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுக்கு இவர் பணம் போகும்.

    ஆனால் வாரிசு என்று நிருபிப்பது சுலபமில்லை. 10 ஆண்டுகளுக்குள் எந்த வாரிசும் வரவில்லை என்றால் பத்தாவது ஆண்டின் முடிவில் கணக்கு செயலற்றதாகி விடும். இதுபோன்ற பிரச்சினைகள் வரமால் இருப்பதற்காக வாரிசுகளிடம் வங்கிக்கணக்கு பற்றிய விவரத்தை தெரிவிக்கும்படி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுருத்துகிறது. தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். அதிக அளவு பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்ததால். அதை எடுக்க ஓன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும். மற்றபடி எந்த செலவும் இல்லாமல் சுவிஸ் வங்கிக்கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment