Monday, 4 June 2018

மனிதர்கள் மாயமாகும் மர்ம தீவு

   உலகின் ஏராளமான மலைகளும் தீவுகளும் கடல் பகுதிகளும் மர்மத்தின் புதையலாக புதைந்து கிடக்கிறது. விளக்க முடியாத வியப்புகளை சுமந்து கொண்டு இருக்கும் ரகசியங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஓன்று மனிதர்களை கொள்ளும் மர்ம தீவு.

   இந்த மர்ம தீவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்த எரியும், குட்டி குட்டியாக தீவுகளும் இருக்கின்றன. இந்த தீவில் ஒன்றுதான் என்வைடேனேட் தீவு. இந்த தீவில் காலடி வைக்கும் நபர்கள் திடிரென மாயமாகி விடுகின்றனர். இந்த மர்ம தீவு கென்யாவில் துர்கான ஏரி அருகே உள்ளது. துர்கான ஏரி ரொடால்க் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டத்தின் மையத்தில் கென்யாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ரொடால்க் ஏரி.

   நீண்டு குறுகலான வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 6௦௦௦ சதுர கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். இந்த ஏரியை சுற்றி அமைந்துள்ள பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. கி.பி.1888-ம் ஆண்டு ஆஸ்திரியா ஆய்வாளர் கொவ்டர்பால் டெலிகி என்பவர் இந்த ஏரியை கண்டுபிடித்தார். இந்த ஏரியை சுற்றி எரிமலைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த ஏரியின் நீர் வெளியேற இயலாத நிலையில் உள்ளது.

   முன்பு ஒரு காலத்தில் இந்த தீவில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்று பக்கத்து தீவில் வாழும் மனிதர்கள் கூறுகின்றனர். வியாபாரத்துக்காக பக்கத்து தீவிற்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்திற்கு பிறகு தீவில் இருந்து வெளிவரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கினர். ஒரு கட்டத்தில் யாருமே வராமல் போனதால், பக்கத்து தீவில் வசிபவர்களுக்கு சந்தேகம் வந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்மதீவாக மாறியது என்வைடேனேட் தீவு.

   கடந்த 1935-ம் ஆண்டு ஆங்கிலேயர் விஞ்ஞானி விவியம் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவுக்கு ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைடேனேட் குட்டி தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின், பில் டேய்சின், போன்றோரை அனுப்பி வைத்தார். நாட்கள் தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆராய்ச்சியாளர்கள். தூரத்தில் இருந்தே ஆராய்சிகளை மேற்கொண்டனர். ஹெலிகாப்டரில் பறந்த படியே வேவு பார்த்தனர். பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறி கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லை. இதையடுத்து பக்கத்து தீவில் வசித்தவர்களை அணுகி தகவல் சேகரித்தார்.

  அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஓன்று வரும் அப்போது நிலத்தில் யார் இருந்தாலும் காணமல் போய்விடுவார்கள். அப்படிதான் அங்கிருந்தவர்கள் காணமல் போயிருப்பார்கள் என்று பக்கத்து தீவில் வசிபவர்கள் கூறுகின்றனர். இந்த பிரமாண்ட ஒளி எப்படி வருகின்றது என்று இன்று வரை அவிழ்க்க முடியாத முடிச்சாகதான் இருக்கிறது.

No comments:

Post a Comment