கிட்டத்தட்ட 5ம் நூற்றாண்டில், காஞ்சிபுரத்தை
தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான் கந்தவர்மன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த
மூன்றாவது மகன் தான் போதி தர்மன். இளம் வயதிலேயே சகல கலைகளையும் கற்று தேர்ந்த
போதி தர்மன், தான் வளர வளர புத்தரின் போதனைகளால் கவரபட்டார். இதன் காரணமாக அவர்
புத்த துறவியாக மாறவிரும்பினார். அவர் தன் என்னத்தை தன் தந்தையிடம் தெரிவிக்க,
இதனால் பெரும் மன வேதனையில் ஆழ்ந்தார் கந்தவர்மன்.
“இந்த மாபெரும் அரண்மனையில் வாழவேண்டிய என்
அன்பு செல்வமே, நீ ஏன் மரணத்தை நோக்கி செல்ல விரும்புகிறாய்” என கண்ணீர் மல்க
கேட்டார் அந்த அரசர். “நான் மரணத்தை நோக்கி செல்லவில்லை தந்தையே, மரணத்திற்கு
அப்பால் உள்ள உண்மைகளை அறிய விரும்புகிறேன்” என்றார், போதி தர்மர். அதோடு, “அரண்மனையில்
வாழ்பவர்களை மரணம் அண்டாதா என்றும், அனைவருக்கும் ஒரு நாள் நிகழத்தான் போகிறது”
என்றார் போதி தர்மர். “இத்தனை பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தின் வாரிசு நீ, உன்னுடைய
கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. ஆனால் நீ எதோ ஒரு உன்னத நோக்கத்தோடு செல்ல
வேண்டும் என்று நினைக்கிராய், உன்னை ஆசிர்வதித்து அனுப்புவதை தவிர எனக்கு இப்போதைக்கு
வேறுவழி இல்லை” என கூறி கந்தவர்மன் போதி தர்மரை அனுப்பி வைத்தார்.
மரணம் குறித்தும் மரணத்திருக்கு அப்பால்
நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் போதி தர்மருக்கு இருந்த பல சந்தேகங்களை, புத்த
பீடத்தின் 27 வது பிரதான குருவான பெண் ஞானி பிரஜன தாரா தீர்த்து வைத்தார். சில
காலத்திற்கு பிறகு, போதி தர்மர் புத்த பீடத்தின் 28 வது குருவானார். அதன் பிறகு போதி தர்மரை,
சீனாவிற்கு சென்று மக்கள் பணியாற்றும் படி, பரஜன தாரா கூறினார். அவரின் கோரிக்கையை
ஏற்று, போதி தர்மர் சீனா சென்றடைந்தார்.
சீனாவில் போதி தர்மர் பல தனிதுவங்களோடு விளங்கினார்.
அவரின் உரையை கேட்க மக்கள் அதிக ஆர்வம் கொண்டனர். எதை பற்றியும் கவலை கொள்ளாமல்,
தன் மனதில் பட்டதை அப்படியே கூறும் ஒரு மிகச்சிறந்த துறவியாக விளங்கினார். பொதுவாக
ஷாப்ளின் குகையில் இவர் உரையாற்றும் போது மக்களை பார்த்து பேசுவது கிடையாது. மாறாக
சுவற்றை பார்த்து தான் பேசுவாராம். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள், யார்
சந்தேகம் கேட்கிறார்கள், இப்படி இவர் எதையும் கண்களால் பார்ப்பது கிடையாதாம். தன்
உள்மன பார்வையில் மட்டுமே அக்கறை கொண்டு சுவருடன் பேசிக்கொண்டு இருப்பாராம்.
இவருக்கு முன்பும் இவருக்கு பின்பும், புத்த பீடத்தில் பல குருமார்கள்
இருந்துள்ளனர். ஆனால் இவருடைய பெயரும் புகழும் மட்டுமே, பல்லாயிரம் ஆண்டுகள்
கடந்தும் நிலைத்து நிற்கிறது.
போதி தர்மரை பொறுத்த வரையில், ஞானம் என்பது கடின உழைப்பும், விடாமுயற்சியும், சுறுசுறுப்புடன் செயல்படுவதுமே ஆகும். புத்த மதம் அதிக அளவில் பரவியுள்ள சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் இதை அடிப்படியாக கொண்டே இயங்குகின்றன. அதனாலேயே அவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் திகழ்கின்றனர்.
No comments:
Post a Comment