Wednesday, 6 June 2018

மருந்தாக பயன்பட்ட புகையிலை


   புகையிலை இன்று நேற்று வந்த பொருள் அல்ல. அதற்கு 8 ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது. அப்போதே தென் அமெரிக்க கண்டத்தின் புகையிலை காணப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் புகையிலையை மக்கள் பயன்படுத்த தொடக்கி இருக்கிறார்கள். புகையிலையை மெல்வது, உடலில் பூசிக் கொள்வது, புகைப்பது என்று பல வழிகளில் பயன்படுத்த தொடங்கினர்.

   புகையிலையின் தோற்றத்துக்கு பழங்குடிகள் கதை ஓன்று உள்ளது. பூமி வறண்டு, மனிதர்கள் பசியால் துடித்த போது தேவதை ஒன்றை கடவுள் பூமிக்கு அனுப்பி வைத்தார். அந்த தேவதையின் வலது கைபட்ட இடங்களில் எல்லாம் உருளைக் கிழங்கு விளைந்தது. இடது கரங்கள் பட்ட இடமெல்லாம் சோளம் விளைந்தது. எங்கெல்லாம் தேவதை உட்கார்ந்தாலோ அங்கெல்லாம் புகையிலை விளைந்தது என்பது தான் அந்த கதை.

   ஆனால் தான் புகையிலை மயக்கத்தை கொடுத்து நம்மை ஓய்வுக்கு தள்ளுகிறது என்று கூறுகிறார்கள்.

   15-ம் நூற்றாண்டில் அமெரிக்காவை கண்டறிந்த கொலம்பஸ் தான் முதன்முதலில் புகையிலை செடியை 1492-ல் ஐரோப்பிய கண்டத்திற்கு கொண்டு வந்தார். அதன்பிறகே புகையிலை உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவியது.

   இந்தியாவுக்கு புகையிலையை அறிமுகப்படுத்தியது ஐரோப்பியர்கள் தான். 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவுக்கு புகையிலைச் செடியை கொண்டு வந்தனர். 1618-ல் பீஜப்பூர், கோல்கொண்டா பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு புகையிலை பயிரிடப்பட்டதாக தெரிகிறது.

   19-ம் நூற்றண்டின் தொடக்கத்தில் சென்னையில் இருந்து மைசூர், கர்நாடகம், மலபார் ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் புக்காணன் கர்நாடகத்திலும், மலபார் கோயம்புத்தூர் பகுதியிலும், மைசூர் சமஸ்தானத்திலும் பரந்த அளவில் புகையிலை பயிர் செய்யப்பட்டு வந்ததாக குறிப்பிடுகிறார். மேலும் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளிலும் புகையிலை சிறப்பாக பயிர் செய்யப்பட்டது.

   அழகன்குளம், பரத்தை வயல், காங்கேயம், யாழ்ப்பாணம் ஆகியவை புகையிலை செழித்து விளையும் இடங்களாக இருந்தன. அப்போது புகையிலை சிறந்த மருந்தாக கருதப்பட்டது, தலைவலி, நோய்த்தடுப்பு, ஞாபக மறதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 1865-ல் பிளேக் நோய் பரவிய போது புகையிலையை மருந்தாக கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து கல்லூரிகளில் புகைபிடிக்காத மாணவர்களுக்கு கசையடி தண்டனையாக வழங்கப்பட்டது.

  வெகு சமீபத்தில் தான் டச்சுக்காரர்கள் முதன் முதலாக புகையிலை ஆண்மைக்குறைவை ஏற்படுத்துவதாக கண்டறிந்தனர். சீன அறிஞர் யங்யாஷி என்பவர் நுரையீரலை புகையிலை சுரண்டி எடுத்து விடும் என்றார். இப்போது புகையிலை ஒரு நாளைக்கு 2,5௦௦ இந்தியர்களை கொள்கிறது.

No comments:

Post a Comment