Thursday, 7 June 2018

ஜப்பானில் உள்ள தற்கொலை காடுகள்


   அழகும் ஆபத்தும் சில சமயங்களில் மர்மமும் நிறைந்த இடம் காடுகள். இப்படி மர்மமும் ஆபத்தும் நிறைந்த ஜப்பானின் தற்கொலை காடு என்று சொல்லப்படும் அகோகிகார காடுகளை பற்றிதான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

   ஜப்பானின் புகழ்பெற்ற புஜி மலைபகுதியில் அடிப்பகுதியின் காடுதான் இந்த அகோகிகாரா வனப்பகுதி. வருடம் முழுவதும் இந்த பகுதியில் காணப்படும் பசுமையும், சூரியனை அதிக அளவில் உட்புகவிடாத அடர்த்தியான மரங்களும் சேர்ந்து, இந்த பகுதியை பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் மாற்றி இருக்கிறது. 2002-ம் ஆண்டு 78 பேரும், 2003-ம் ஆண்டு 103 பேர் என்று கொஞ்சம் கொஞ்சமாக கிட்டதட்ட வருடத்திற்கு 1௦௦ பேருக்கு குறையாமல் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.

   இன்னமும் பல உடல்கள் கண்டுபிடிக்கபடாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக இந்த பகுதியை சேர்ந்த காவலர்கள் கூறுகின்றனர். இந்த வனப்பகுதி இந்த அளவுக்கு மர்மம் நிறைந்ததாக மாறுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் ஜப்பானில் பாரம்பரியமாக கூறபட்டுவரும் கதைகளின் படி அரசர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில், தவறு செய்தவர்கள் தனிமையான ஒரு இடத்தில் விடப்பட்டு சாகடிக்கபடுவார்கள். அப்படி சாகடிக்கப்பட்டவர்களின் ஆன்மா தான், இந்த வனப்பகுதியை மர்மம் நிறைந்த பகுதியாக மாறுவதற்கு காரணமாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.

   இதை நிருபிக்கும் விதமாக பல மர்மமான விஷயங்கள் எப்பொழுதும் நடந்து வருவதாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வனப்பகுதியை சுற்றி பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து காட்டுக்குள் போனவர்கள் யாருமே இதுவரைக்கும் திரும்பி வந்தது இல்லை என்ற அதிர்ச்சியான விசயத்தையும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

   இந்த பகுதியில் தற்கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து வந்துள்ளனர். அவர்களின் கருத்துப்படி ஒருவித எதிர்மறையான உணர்வுதான் தற்கொலை செய்ய தூண்டுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தற்கொலை செய்ய தூண்டும் அளவுக்கு அப்படி என்ன மர்மம் இருக்கு என்று தெரிந்து கொள்ள பலர் ஆராய்ச்சி செய்தார்கள் ஆனால், யாராலையும் அந்த பகுதியின் மர்மத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை இந்த வனப்பகுதியில் உள்ள பல நுளைவாயில்களில் தற்கொலைக்கு எதிரான வாசகங்களையும், தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு உதவுவதற்காக HELP LINE NO முதலியவற்றையும் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

   அப்படி இருந்தும் இங்கு நடக்கும் தற்கொலையின் அளவு குறையவில்லை என்று தெரிவிக்கின்றனர். கடந்த சில வருடங்களாக இந்த வனப்பகுதிக்குள் நுழைய இருக்கும் சிறு சிறு வழித்தடங்களை தடை செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வனப்பகுதியில் உள்நுளைபவர்களை எளிமையகாக கண்காணிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையிலேயே இந்த முறை பயன் தரக்கூடியதா இல்லையா என்று போகப்போகத்தான் தெரியும்.

No comments:

Post a Comment