Sunday, 24 June 2018

கொரிய மக்களால் கடவுளாக பார்க்கப்படும் தமிழ் பெண்

    கொரிய மக்களால் கடவுளாக பார்க்கப்படும் ஒரு இளவரசியின் மறைக்கப்பட்ட வரலாற்றை தோண்டி எடுப்போம் வாருங்கள். நெடுந்தொலைவில் இருந்து ஒரு இளவரசி படகு மூலம் கொரியாவுக்கு சென்று அந்நாட்டின் மன்னன் சுரோவை மணக்கிறார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடத்தின் பெயர் ஆயுத்த இது தான் கொரிய மக்களுக்கு கிடைக்க பெற்ற தகவல். ஆயுத்த என்பது அயோத்தியாவை தான் குறிக்கிறது என்றும் அந்த இளவரசி, அயோத்யாவின் இளவரசிதான் என்று கூறிய வடஇந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இதைப்பற்றி ஒரு புத்தகத்தை எழுதியதுடன் கொரிய மக்களையும் நம்ப வைத்து அயோத்தியாவில் நினைவு மண்டபமும் எழுப்பி விட்டனர்.

    பின்னர் இது சம்பந்தமான ஆய்வுகளை பேராசிரியர் கண்ணன் தொடங்க, அந்த ஆய்வை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர்தான் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள். இப்படி மிகசிறந்த ஆய்வாளர்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து அந்த இளவரசி மற்றும் அவர் வழிவந்தர்களை பற்றி தெளிவாக ஆராய்ச்சி செய்யும் பொழுது. அதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின. அயோத்தியாவில் கடலே இல்லை எனத் தொடங்கி, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம் என்றும் அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்பொழுது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமாரி என்றும் நிரூபிக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் இரு நாடுகளுக்கும் மொழிகலப்பு உள்ளத்தையும், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஒற்றுமை உள்ளத்தையும் பல தரவுகள் மூலம் நிரூபித்தனர்.

    இன்றும் கொரிய மொழியில் அம்மா, அப்பா, புல், தெரு, நாள் என பல தமிழ் சொற்கள் கலந்திருக்கின்றன. இப்படி பல ஆதாரங்களை முன்வைத்தப் பின்பு கொரியாவில் பல லட்சம் பேரால் கடவுளுக்கு ஒப்பானவராக பார்க்கப்படும் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை கொரிய மக்கள் ஏற்றுக் கொண்டனர். செம்பவளம் படகு மூலம் கொரியாவுக்கு செல்லும் போது, கடலில் படகை சமநிலைப்படுத்த அவர் பவள கற்களை கொண்டு சென்றுள்ளார். அந்த பளக் கற்களை கொண்டு கொரிய மக்கள் இன்றும் வணங்கி வருகின்றனர்.

No comments:

Post a Comment