Wednesday, 6 June 2018

திருடு போகும் சடலங்கள்


   இது போன்ற ஒரு நிகழ்வை, நீங்கள் உங்கள் வாழ்நாளில் நிச்சயம் கேள்விப்பட்டிருக்க மாடீர்கள். இந்த விஷயத்தை கேட்டால் நாம் மார் தட்டி கொள்ளலாம். நாம் எவ்வளோவோ மேல் என்று. சீனா மக்களின் மூட நம்பிக்கை வேறு விதமாக உள்ளது.

   திடீரென சீனாவில் ஒரு வினோதமான வழக்குகள் காவல் நிலையத்தில் குவிய தொடங்கியது. "தனது தாயார் இறந்த துக்கமே இன்னும் கலையவில்லை, அதற்குள் எனது அம்மாவை புதைத்த இடத்தில் அவரின் சடலத்தை காணவில்லை" என்று அந்த மகன் கண்ணீர் மல்க வழக்கு பதிவு செய்து உள்ளார். இது முதல் வழக்கு அல்ல. அந்த மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கு பதிவாகியுள்ளது.

   இது நடைபெற்ற ஆண்டு மார்ச் மாதம் 2016 வருடம். சடலங்கள் காணமல் போவது தான், அந்த காவல் நிலைய அதிகாரிக்கு பெரிய தலைவலியாக இருந்தது. வேறு ஏதாவது காணவில்லை என்றால் கண்டுபிடித்து விடலாம். சடலம் காணவில்லை என்றால் எங்கு சென்று கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு சமாதியாக சென்று தோண்டி பார்த்தால் தான் உண்டு, அப்படி பார்த்தல் கூட அது இவர் தான் என்று கண்டுபிடித்து விட முடியுமா என்ன.

   ஆனால் அப்படி அடுத்தடுத்து குவிந்த இந்த வழக்குகளுக்கு காரணங்களும் உண்டு. பழங்கால முறைகளை பின்பற்றுவதில் இன்றும் சீனர்களை அடித்து கொள்ள ஆளில்லை. ஆனால் அதை இந்த அளவுக்கு கடைபிடிப்பார்கள் என்று தான் யாரும் எதிர் பார்க்க வில்லை. பழைய கலாச்சார மரபு படி வீட்டில் ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு இறந்து விட்டால், அவர் நிறைவேறாத ஆசைகளுடன் சுற்றித்திரிவார் என்று சீன நாட்டு மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது.

   அப்படி அவர் ஆவியாக சுற்றாமல் இருக்க ஒரு பரிகாரமும் உண்டு. அது வேறொன்றும் இல்லை. இறந்து போன ஒரு பெண்ணின் சடலத்தை எடுத்து அந்த சடலத்தை மனபெண்ணாக அலங்கரித்து அவரது கல்லறைக்கு அருகிலேயே புதைத்து விட வேண்டும். இப்படி செய்வதை தான் பேய் திருமணம் என்கிறார்கள். இந்த ஒரு விசயத்துக்காக தான் சீனாவில் சடலங்கள் அதிகம் திருடு போகிறது.

   அப்படி திருடப்படும் சடலங்கள் இந்திய மதிப்பின் படி 90,000 ரூபாயில் இருந்து 1 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளன. ஜூவே கிவே என்ற வாலிபன் ஒருவன் தனது அம்மா உடலை காணவில்லை என்ற மிக வருத்தத்தில் இருந்துள்ளான். அவர் தனது அம்மா சடலத்தை கண்டுபிடிப்பதற்காக இது வரை இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். ஆனால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு புதைக்கப்பட்ட சடலத்தை எங்கு சென்று கண்டுபிடிக்க முடியும்.

   பேய் திருமணம் எனப்படும் இந்த பழக்க வழக்கம் 1949ல் ஆண்டு சீனாவில் சேர் மேன் மாவோ என்பவரால் தடை செய்யப்பட்டது. அப்படி தடை செய்யப்பட்ட பின்னர், சீன மக்கள் உண்மையான சடலத்தை புதைக்காமல், பெண்போன்ற உருவ பொம்மைகளை சடலத்தின் அருகில் புதைத்தனர். கிட்டத்தட்ட 69 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த நடைமுறை, அதாவது நிஜ சடலங்களை எடுத்து மணப்பெண்ணாக அலங்கரித்து புதைப்பது தலைதூக்க தொடங்கியுள்ளது என்பது தான் கொடுமையான விஷயம்.

    2011 ம் ஆண்டு ஒருவன் பணத்திற்காக தனது மனைவியை கொலை செய்து விற்க முயன்றதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டான். இதில் பழைய சடலங்களை எடுத்து தந்தாள் ஒரு விலை, இளமையான சடலத்தை அதாவது இளம் வயதில் இறந்த பெண்ணின் சடலத்தை கொடுத்தால் அதன் விலை இந்திய மதிப்பில் 10 லட்சம் வரை கிடைக்குமாம். இதற்காவே ஒரு கும்பல் இறப்பவர்களின் விவரங்களை சேகரித்து கொண்டே இருப்பார்களாம். அழுகி போன சடலம் கூட 5௦,௦௦௦ வரை விலை போகுமாம்.

   இவர்களே இப்படி என்றால் இறந்த உடலை பாதுகாப்பதில் அதன் சொந்த காரர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியுமா? இறந்தவர்களை சுடுகாட்டில் புதைக்காமல் தனது வீட்டின் அருகிலேயே புதைக்கும் முன் அந்த சடலத்தை கடினமான இரும்பு பெட்டியில் வைத்து யாரும் திறக்க முடியாதபடி வெல்டிங் செய்து கல்லறை கட்டி அதன் அருகில் CCTV கேமராவும் பொருத்தி விடுகின்றனர். என்ன ஒரு வினோதமான சம்பவங்கள். இன்னும் இது போன்ற பேய் திருமணங்கள் சீனாவில் நடந்து கொண்டு தான் இருகின்றன.

No comments:

Post a Comment