நாம் பொதுவாக மகாபாரதத்தில் ஒரு பெண், அண்ணன்
தம்பிகளை திருமணம் செய்திருப்பதை கேள்விபட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள மொறேனா என்ற கிராமத்தில்
வாழும் அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மொறேனா எனப்படும் இந்த கிராமம். மத்திய
பிரதேசத்தில் இருந்து, 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த
பகுதியில் வாழும் கிராம மக்கள் இப்படி ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்து கொள்வதற்கு
முக்கிய காரணமாக கூறபடுவது ஆண் பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லை என்பதுதான்.
ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால்
ஒரு வீட்டில் ஒரு பெண் இருந்தால் அந்த வீட்டில் பல மாப்பிள்ளைகள் இருப்பார்கள்
எதுவாக இருந்தாலும், இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்களை தான்
திருமணம் செய்து கொள்கின்றனர். வெவ்வேறு குடும்பத்து ஆண்களை திருமணம் செய்து
கொள்வது இல்லை.
ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்தால் அந்த குடும்பத்தில் இருக்கும்
சகோதரனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் உரிமை இல்லை. ஆயினும் கூட சில
குடும்பங்களில் ஒரு பெண் ஒரே ஆணை திருமணம் செய்து கொண்டவர்களும் கூட இந்த
கிராமத்தில் காணப்படுகின்றனர். ஆறு முதல் எட்டு ஆண்களை திருமணம் செய்து கொண்ட
பெண்களும் இங்கு காணப்படுகின்றன.
மொறேனா என்னும் இந்த கிராமத்தை சுற்றி
இருக்கும் பல கிராமங்களில் இதை பாரம்பரிய சட்டமாக, கடைப்பிடித்து
வருகின்றனர். மொறேனா மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் பல இடங்களில் இது போன்ற
விசித்திரமான முறை பின்பற்றபடுகிறது. உத்தர்காண்டில் ராஜோவர்மா என்னும் பெண் ஒரே
குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரர்களை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து
வருகிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு இனத்தை சேர்ந்த மக்கள்
அண்ணன் தம்பிகளுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும். வழக்கம் கொண்டுள்ளனர்.
இவர்கள் மத்தியில் தொப்பி அணியும் பழக்கம்
உள்ளது. யார் ஒருவர் அந்த பெண்ணுடன் இருக்கிறாரோ தொப்பியை வீட்டின் வெளியே மாட்டி
வைத்து விட்டால் மற்றவர்கள் உள்ளே செல்லமாட்டார்கள். இதில் மிகவும் சுவாரஸ்மான
தகவல் என்னவென்றால். தமிழகத்திலும் இப்படி ஒரு முறை பின்பற்றபட்டு வருவதாக
கூறப்பட்டு வருகிறது. நீலகிரியில் வாழ்ந்து வரும் ஒரு இன மக்கள் மத்தியில்
இந்த வினோத வழக்கம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment