விநோதங்களுக்கு குறைவில்லாத நமது உலகில் சில
வினோதங்கள் ஆச்சரியப்பட வைக்கும். சில வினோதங்கள் அதிர்ச்சியடைய வைக்கும். இன்று
நாம் பார்க்கப் போகும் வினோதம்,
அதிர்ச்சியடைய வைக்கும் வினோதம் என்று
கூறலாம்.
இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இன மக்கள் இறந்தவர்களின்
சடலத்துடன் ஒருவாரம் வாழும் ஐதீகம் இன்றுலவும் உள்ளது என்று சொன்னால் உங்களால்
நம்பமுடிகிறதா. நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு
சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் மத்தியில்தான் இந்த
வினோத ஐதீகம் இருந்து வருகிறது.
இவர்கள் தங்கள் குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. தங்களுக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள், இறந்தவர்களை தங்கலுடனேயே வைத்துக் கொள்கின்றனர். எருமை உயிர் பலி தரும்
வரையில் இவர்கள் ஒருவருடைய மரணத்தை மரணமாக எடுத்துக் கொள்வதில்லை. வாரக்கணக்கில்
அல்லது மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் என இறந்தவர்களின் உடலை வீட்டிலேயே
வைத்துக்கொண்டு, அவர்களுக்கு உணவு ஊட்டி, உடை மாற்றிவிட்டு அவர்கள் மீது ஒரு உயிர் உள்ள நபர் மீது அக்கறை
செலுத்துவது போல வாழ்கின்றனர்.
ஒரு சில டோராஜன் இன மக்கள் வருடா வருடம், மண்ணில் புதைத்த தங்களின் உறவினர்களை தோண்டி எடுத்து, புது உடைகள் உடுத்தி உணவு ஊட்டி தங்களுடன் வைத்துக் கொண்டு மீண்டும்
புதைத்து விடுகின்றனர். இந்த நிகழுவு தொடர்ந்து இன்றளவும் நடந்து வருகிறது. சிலர் வருடங்களுக்கு
ஒரு முறை உடலை தோண்டி எடுக்கும் இந்த நாட்களில் டோராஜன் மக்கள் சுத்தம் செய்தும்
வைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment