அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இதய
நோயாளிகள் தினசரி
சிறிது கருப்பு
சாக்லேட் வீதம் 1௦
ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பையும், பக்கவாதத்தையும் தடுக்கலாம். இது நாம்
கூறும் விஷயமல்ல, ஆஸ்திரேலிய
ஆய்வாளர்கள் கூறியது.
மெல்போர்ன் மோனாஷ்
பல்கலைகழகத்தைச்
சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், அந்நாட்டைச்
சேர்ந்த 2 ஆயிரத்து
13 பேரை ஆய்வுக்குப்
பயன்படுத்திக் கொண்டனர். ஆய்வின் முடிவில், 7௦ சதவீதம் அல்லது அதற்கு மேல் 'கோகோ'
கலவை உள்ள சாக்லேட்டை தினசரி 1௦௦
கிராம் அளவுக்குச்
சாப்பிடுவது, இதய
அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் என்கிறார்கள்.
இது தொடர்பாக முன்னணி ஆய்வாளரான எல்லா
ஸோமர், உயிரைப் பறிக்கும் 7௦ இதய பாதிப்புகள், உயிரைப் பறிக்காத 15 இதய பாதிப்புகள் 1௦ ஆண்டுகளுக்கு மேலாக கருப்பு சாக்லேட்
சாப்பிடும் 1௦
ஆயிரம் பேரில்
ஒருவருக்கு முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் என்று கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்.
"தொடர்ந்து 1௦ ஆண்டுகாலம் தினசரி 1௦௦ கிராம் கருப்பு சாக்லேட் சாப்பிடுவதால்
என்னென்ன ஆரோக்கிய அனுகூலங்கள் ஏற்படக் கூடும் என்று நாங்கள்
கணித்திருக்கிறோம்.
அதிக 'ரிஸ்க்'
உள்ள இதய
வியாதிக்காரகளுக்கு மருந்துரீதியான சிகிச்சையை விட 'கருப்பு சாக்லேட் தெரபி' நல்ல பலனைக் கொடுக்கும் என்று எங்கள்
ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியிருக்கின்றன" என்கிறார்
ஸோமர்.
இதய
நோயாளிகளுக்கு இனிப்பான செய்திதான்.................
No comments:
Post a Comment