Monday, 16 July 2018

எகிப்து மம்மிகளை எப்படி பதபடுத்தினார்கள் என்று தெரியுமா?


       எகிப்தியர்கள் என்றாலே பிரமிடுகள் தான் நம் நினைவுக்கு வரும். உலக அதிசியங்களில் பிரமிடும் ஓன்று என்பது அனைவரும் அறிந்த உண்மை. எகிப்து நாட்டின் எல்லையிலும், நைல் நதி கரை ஓரமாக அமைந்துள்ள சீசா பிரமிடுகள் 4000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பிரமிடுகள் பண்டைய உலகின் 7 உலக அதிசயங்களில் மிகவும் பலமையானதகாவும், இன்றைய காலம் வரை அழிந்து போகமால் நிலைத்து நிற்பதாகவும் உள்ளன. பொதுவாக பிரமீடு என்றாலே அனைவருக்கும் தோன்றுவது என்றவென்றால், இது உலக அதிசயங்களில் ஓன்று மற்றும் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி வைக்கப்படும் இடம் என்பது தான்.



   அறிவியலாளர்களின் கருத்துப்படி, இந்த சீசா பிரமிடின் கட்டிட திட்டங்களை தீட்டுவதற்கு சுமார் 1௦ ஆண்டு காலம் தேவைப்பட்டதாகவும். இதை கட்டி முடிபதற்கு 2௦ ஆண்டு காலம் தேவைப்பட்டதாகவும் கூறபடுகிறது. அதாவது கி.மு 27௦௦க்கு பிறகு கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 17௦௦ வரை பிரமிடுகளை கட்டியுள்ளனர். இதன் மொத்த பரப்பளவு 13 ஏக்கர் ஆகும். இதன் அடி பரப்பு 1134 அடியாகவும், உயரம் 486 அடியாகவும் அமைந்துள்ளது. இந்த பிரமிடுகள் சுமார் 21 லட்சம் கற்களினால் 2௦ வருட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த பிரமிடுகளில் பதப்படுத்தப்பட்ட மம்மிகளை பற்றிய தகவல்கள் நமக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாகத் தான் இருகின்றன.



   பொதுவாக இறந்தவர்களின் உடல்களை தனியாக ஒரு கூடத்துக்கு எடுத்துச் சென்று மரணக் கட்டிலில் அவரை கிடத்தி பேரிச்சை பழம், மது, நைல் நீரினால் கழுவுவார்கள். உடலின் இடது பக்கத்தை அறுத்து உள்ளே இருக்கும் நுரையிரல், கல்லீரல், பெருங்குடல், சிறுங்குடல் ஆகியவற்றை நீக்கி, கல் உப்பினால் பதப்படுத்துவார்கள். எகிப்தியர்கள் இதயத்தை அறிவின் இருப்பிடமாக கருதுவதால் அதுமட்டும் உள்ளே இருக்கும். ஆனால் ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து மூளையை எடுத்து விடுவார்கள். உடல் கல் உப்பினால் மூடப்படும். 40 நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரினால் கழுவி அதன் மீது வாசனை திரவியங்களை தடவுவார்கள். உடல் தற்பொழுது ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்து இருக்கும்.



   இதன் பிறகு மரண கோவில் என்று அழைக்கப்படும் லூசார் கோவிலின் பலி பீடத்தில் சில நாட்கள் வைத்திருப்பார்கள். இது நேரடியாக சூரிய ஒளிபடும் இடம் என்பதால் பாலைவன வெயிலின் வெப்பம் காரணமாக உடலின் ஈரப்பதம் முழுமையாக ஆவியாகி இப்பொழுது காய்ந்த உடல் மட்டும் இருக்கும். உடல் பகுதிகள் தனித்தனியாக கனுபிக் ஜார் என சொல்லப்படும் ஜாடிகளில் வைத்திருப்பார்கள். உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாக சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல் பகுதி ஆகியவைகள் தனித்தனியாக சுற்றப்படும். இறுதியில் பிரமிடுகளின் மையப்பகுதியின் அரச மரியாதையுடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்படும்.

 

  அரசர் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களும், பிரமிடில் வைக்கப்படும். இதில் தங்கம், வைரம், போன்ற அனைத்து நகைகளும் உள்ளே வைத்து இருப்பார்கள். இப்படி சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாக, இறந்தவர்களின் உடலை பதபடுத்தி பாதுகாத்து வந்திருப்பது நம்மை ஆச்சரியத்தில் தான் ஆழ்த்துகின்றது. 

No comments:

Post a Comment