Thursday, 5 July 2018

இறந்த கணவரின் மூலம் குழந்தை பெற்ற பெண்

    பீஜியா சென் என்பவர், 32 வயது மதிக்க தக்க பெஞ்சியன் லியு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை, வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தன, எதிர்பாரத விதமாக பென்சியன் லியு அவர்கள் மரணம் அடைந்தார். தன்னுடைய கணவர் பெஞ்சியன் லியு அவர்கள் மரணம் அடைந்த பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து பீஜியா சென் என்பவர் அவர் கணவர் மூலமாகவே குழந்தை பெற்றார்.
    பெஞ்சியன் லியு அவர்கள் NYPD, அதாவது NEW YARK POLICE ஆக பணியாற்றி வந்தார். டிசம்பர் 2014 ல் நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் பலியானார். தனது கணவர் இறந்த பிறகு அவரது விந்தணுவை சேமித்து மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு குழந்தை பெற்றுள்ளார் பீஜியா சென். பெஞ்சியன் லியு இறந்த அன்று இரவே, தனது கணவரின் விந்தணுவை சேமித்து வைக்க கோரி மருத்துவ மனையில் கூறினார், பீஜியா சென் அவர்கள் தனது கணவர் பெண் குழந்தை வேண்டும் என மிகவும் விரும்பினார் என்பதையும் கூறியுள்ளார், பீஜியா சென் அவர்கள் தனது தோழிகளிடம் தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று அவ்வப்போது கூறி வந்துள்ளார், அப்பொழுது அவர்களது தோழிகள், எந்த SCAN னும் செய்யாமல் எப்படி கூறுகிறாய், என்று கேள்வி எழுப்பினர், பீஜியா சென் அவர்கள்  கரு தரித்தது எளிதான அல்ல.
     கணவனின் சேமிக்கப்பட்ட விந்து உறைய வைக்கப்பட்டு இருந்தது, பல முறை கரு தரிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. கரு தரிக்கும் வரை தனது சொந்தங்களுக்கு பீஜியா சென் அவர்கள் இதைப் பற்றி கூறவில்லை, ஒருவேளை இத்தனை முறை கரு தரிப்பு தோல்வியுற்றது தெரியவந்தால், அவர்கள் மனம் நொந்து போவார்கள் என, சென் அவர்கள் கருதியுள்ளார். ஆனால், பீஜியா சென் அவர்களின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஒரு நாள் பீஜியா சென் அவர்கள் கருவுற்றார், தனது கணவரின் விந்தணுவின் மூலம் கருவுற்ற பிறகு, இந்த செய்தியை மிக்க மகிழ்ச்சியுடன் தனது சொந்தங்களுடன் நெகிழ்ச்சியுடன் கூறி மகிழ்ந்துள்ளனர் பீஜியா சென்.
    பீஜியா சென் கணவர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவரின் விந்தணு மூலமாக கரு தரித்து குழந்தை பெற்றுள்ளார், பீஜியா சென், குழந்தையை கண்ட தாத்தா பாட்டி, முகம் அவர்களின் மருமகளை போன்று இருந்தாலும், கண்கள் மற்றும் நெற்றி அப்படியே தங்களது மகனை போன்று உள்ளது என்றும், பேத்தியின் முகம் வழியாக தங்களது மகனை பார்க்கிறோம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். வெறும் மூன்று மாதம் காலம் மட்டுமே இல்லற வாழ்க்கையை அனுபவித்து, தனது கணவரின் ஆசை நிறைவேற வேண்டும் என, மூன்று வருடம் போராடி, ஒரு பெண் குழந்தை பெற்ற பீஜியா சென்னின் காதல் மிகவும் புனிதமானது.

No comments:

Post a Comment