செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு
பயிற்சி அளிக்கும் வகையில், ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாயில் மாதிரி உலகம்
உருவாக்கபடுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலையை அறிய ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில குறிப்பிட்ட ஆய்வுகளை
மேற்கொள்வதில் ஐக்கிய அமீரகம் களம் இறங்கியுள்ளது.
இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற
அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கபடுகிறது. இதற்காக 2 மில்லியன் சதுரஅடி
பரப்பளவில் ராட்சஸ கூண்டு அமைக்கபடுகிறது. இது துபாயின் மையப்பகுதியின்
பாலைவனத்தில் உருவாக்கபடுகிறது. அதற்காக 1௦௦ மில்லியன் பவுண்ட் செலவு செய்ய முடிவு
செய்துள்ளனர். இதற்கு செவ்வாய் கிரக அறிவியல் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மாதிரி உலகத்தில் மனிதர்களை தங்க வைத்து,
செவ்வாய் கிரகத்தில் வாழக்கூடிய சூழ்நிலைப் பயிற்சி உருவாக்கபடுகிறது.
பயிற்சியாளர்கள் வெளியுலகத்தை அறியாவண்ணம் ஒருவருடம் தங்கி இருக்க வேண்டும்.
மாதிரி உலகத்துக்குள் தங்கி இருபவர்களுக்கு தேவையான ஆக்சிஷன் மற்றும் உணவும்
வழங்கப்படும்.
இது குறித்து துபாய் மன்னர் ஷேக் முகமது பின்
ரஷித் தெரிவிக்கையில், செவ்வாய்கிரகத்தில் மக்களை தங்க வைக்கும் முயற்சியில்
சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்னோடியாக விளங்க ஐக்கிய அமீரகம்
விரும்புகிறது. அதற்கான முயற்சியே இத்தகைய முயற்சி ஆகும்.இன்னும் நூறு ஆண்டுகளில்
அதாவது 2117ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியமர்த்த திட்டம்
வகுத்துள்ளோம். என்றார்.
இது குறித்த திட்டதிற்காக உலகம் முழுவதிலும்
இருந்து விஞ்ஞானிகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment