Thursday, 12 July 2018

நேரு குடும்பம் மறைத்த ரகசியம்


   இந்திய சுதந்திர வரலாறு பலருக்கும் தெரிந்திருக்கும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிகமாகவே படித்திருப்போம். வரலாறு என்பது மேலோட்டமாக கடந்து வரும் விஷயம் அல்ல. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க அகிம்சை வழியில் போராடியவர் காந்தி. இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நேரு.


    இந்திரா காந்தி, நேருவின் மகள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் இந்திரா பிரியதர்ஷினி. பின்னர் எங்கிருந்து காந்தி வந்தது. காந்தி குடும்பத்துக்கும் நேரு குடும்பத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியுமா.


   நேரு என்ற வார்த்தைக்கு கால்வாய் என்று பொருள். ஆரம்ப காலங்களில் நேரு குடும்பத்தினர், மற்றும் மூதாதையர்கள் தங்கி இருந்த வீடு கால்வாய் ஓரத்தில் அமைந்து இருக்கிறது. கால்வாயை குறிக்கும் நகர் என்ற சொல்லே நேரு என்று உருமாறி இருக்கிறது. நேரு குடும்பத்தில் பெண் பெயராக ஹவுல் என்ற பெயரே சேர்த்து வந்துள்ளனர். நேரு என்ற பெயர் பிரபலம் ஆனதும் ஹவுளை விடுத்து நேரு என்ற பெயரை சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். இந்திரா பிரியதர்ஷினி, இந்திரா காந்தி ஆனதற்கு மூன்று கதைகள் சொல்லபடுகிறது.


1. தந்தையை போலவே இந்திராவும் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். அபொழுது அலஹாபாத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு WINE விற்பனை செய்து கொண்டு இருந்த நவாப் கானின் மகன் பெரோஸ் கான் மீது இந்திராவுக்கு காதல் வந்துள்ளது. பின்னர் லண்டனில் இருக்கும் மசூதியில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்திரா தன்னுடைய பெயரை மைமூன் பேகம் என்று மாற்றி கொள்கிறார். ஆனால் நேருவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இந்திராவின் இந்த செயலால், இந்திராவின் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ என்று பெரோஸ் கானிடம் பேசுகிறார். அதன்படி பெரோஸ் கான் என்பதை பெரோஸ் காந்தி என்று மாற்ற வேண்டுகிறார். இதனால் பெயர் மாற்றம் பெற்ற பெரோஸ் காந்தி மனைவியின் இந்திரா காந்தி என்று மாற்றம் பெற்றது.


2. மகளுக்கு வேறு மதத்தவரை திருமணம் செய்து வைக்க நேருவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை, இதனால் நேருவின் குடும்பத்துக்கு பெரும் அவமானம் ஏற்படும் என்று கருதினார். நேருவின் விருப்பத்தை அறிந்த காந்தி பெரோஸ் கானை தத்து எடுத்து கொள்கிறார். இதனால் பெரோஸ் கானின் பெயர் பெரோஸ் காந்தியாக மாற்ற படுகிறது. பெரோஸ் கானுக்கு இந்திராவை மணம் முடித்து வைக்க நேருவும் சம்மதிக்கிறார்.


3. பெரோஸ் கானின் உண்மையான பெயர், பெரோஸ் ஜகாங்கீர் காண்டே. பெரோஸ் ஒரு பார்ஸ்லே குடும்பத்தில் பிறந்தார். பெரோஷின் அப்பா பெயர் பெடுளேன் ஜகாங்கீர் காண்டே, அம்மா பெயர் ரதி பாய். இவர்கள் மும்பையில் வசித்து வந்தனர். கல்வியை கைவிட்ட பிறகு 1930ம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குகொள்கிறார் பெரோஸ். அப்பொழுது மகாத்மா காந்தியின் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக தனது பெயரில் உள்ள காண்டேவை காந்தி என மாற்றிக் கொண்டார்.

   இப்படி தான் இந்திரா பிரியதர்ஷினி என்ற பெயர் இந்திரா காந்தியாக மாறியது என்று கருத்துகள் நிலவுகிறது.


No comments:

Post a Comment