அயர்லாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம்
ஒன்றுக்கு ராஜாவாக காட்டு மலை ஆட்டுக்கு முடி சூட்டப்பட்டு விநோதத்தை
ஏற்படுத்தியுள்ளனர். கிலோரின் நகரின் மக்களே இந்த ஆட்டை ராஜாவாக முடி
சூட்டியுள்ளனர். அயர்லாந்தில் கொண்டாடப்படும் பெக்பேர் பண்டிகை மிகவும் பழமையான
திருவிழா ஆகும்.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, அயர்லாந்தில்
கிலோரின் நகரத்தில் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டுக்குட்டி ஒன்றை காட்டில்
இருந்து பிடித்து வருவார்கள். அந்த ஆட்டுக்கு மாணவி ஒருவர் ராஜா என்று மகுடம்
சூட்டுவார். இருவரும் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும்
இந்த திருவிழா முடியும் வரை. ஆடுதான் அந்த நாடுக்கு அரசன்.
17 ம் நூற்றாண்டில் இருந்து இந்த வினோத திருவிழா
நடைபெற்று வருகிறது. திருவிழா முடியும் வரை ராஜாவாக முடிசூட்ட பட்டிருக்கும்
ஆட்டிற்கு, அரச மரியாதை வழங்கபடும். ஆட்டிற்கு சாம்பல் மரக் கிளைகள், தண்ணீர்
மற்றும் முட்டைகோஸ் ஆகியவை உணவாக வழங்கப்படும்.
வேட்டைக்கு சென்ற மன்னர் ஆபத்து ஒன்றில் இருந்து
மீண்டு, வரையாடின் உதவியுடன் நாடு திரும்பினாராம். அதற்கு நன்றி கடன் செலுத்தும்
வகையில் இவ்விழா ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. சென்ற
ஆண்டு கருப்பு நிற வரையாடு ஒன்றும் ராணியாக கல்தின் கோகணும் தேர்வு செய்யபட்டுனர்.
இந்த ஆண்டும் இந்த திருவிழா வெகு விமர்சியாக துவங்கி உள்ளது. முடிசூட்டப்பட்ட
ஆட்டிற்கு முட்டைகோஸ் விருந்து அளிக்கப்பட்டது.
திருவிழா முடிந்த பின்னர். ஆட்டை அது வசித்த
இடத்திற்கே மீண்டும் அனுப்பிவிடுவார்கள். இந்த திருவிழாவின் போது
கலைநிகழ்ச்சிகளும் நடத்தபடுகின்றன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில்
இரண்டு நாட்கள் இந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
No comments:
Post a Comment