Sunday, 8 July 2018

மனித இனம் அழிந்தாலும் இந்த இனம் அழியாது



   நாய்கள் நம் மனித இனத்தோடு தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. ஒரு சில வீடுகளில் வசதி இருந்தால் தங்களது குடும்ப அட்டையில் கூட நாய்களின் பெயர்களை இணைத்து கொள்வார்கள். நன்றியுள்ள பிராணியாக வளம் வரும் நாய்கள் குட்டியில் இருந்து தன்னுடைய இறப்பு வரை ஒரே வீட்டில் அன்போடு வளர்க்கப்படும் கதைகள் நாம் கேள்விபட்டிருப்போம். அதன் அன்பும் அரவணைப்பும் மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆனால் உண்மையில் மனிதர்களுக்கு தான் நாய்கள் தேவை.

   மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லாமல் போனால் கூட நாய்கள் கண்டிப்பாக உயிருடன் வளம் வரும் என்கிறது இன்றைய அறிவியல். மனித இனம் அழிந்த பின்பு பல நூற்றாண்டுகள் கூட நாய்கள் உயிருடன் இருக்கும் என்று உறுதியாக கூறுகின்றனர் ஆராய்சியாளர்கள். இது எப்படி சாத்தியம்.

    American Museum of Natural History –ல் இருக்கும் அந்த ஆராய்ச்சி அறையை தன் உலகமாக மாற்றிக் கொண்ட Dr.ஜாக்சென் என்பவர் ஒரு நாய் பிரியர். நாய்கள் குறித்த ஆராய்ச்சியில் கடந்த 1௦ வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து கண்கள் விரிய விவரிக்கிறார். இந்த உலகில் மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைய தொடங்கி தோராயமாக 3௦ லட்சம் வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் நாய்கள் பரிணாம வளர்ச்சி அடைய தொடங்கி 4௦௦ லட்சம் வருடங்கள் முடிந்து விட்டது. அதாவது நம் மனித இனம் தொன்றுவதற்கு பல காலம் முன்பே நாய்கள் உலகில் கால் பதித்து விட்டன.

   இத்தனை வருடம் ஒரு இனம் உயிர்பெற்று இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இந்த இடத்துக்கு மனிதனுக்கு மிக அருகில் வரும் நாய்கள் பல்வேறு பணி யுகங்கள், மற்றும் வெப்ப காலங்களை பார்க்க வேண்டி இருந்தது. அதற்கு ஏற்றபடி தன் உடல் அமைப்புகளையும் மாற்றி கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்தன. உலகின் முதல் நாய் இனம், தற்பொழுது இருக்கும் நாய்கள் போன்று இருந்தது இல்லை. அவை அளவில் மிகவும் சிறியவை. மேலும் உணவுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்தது. இதனால் ஓடுவதற்கு வசதியாக அதன் கால்கள் பெரிதாகின. உடலும் அதற்கு ஏற்றவாறு பெரிதாகின. பணியுகத்தை சமாளிக்க உடல் பெரியதாகியது. அந்த இனத்தில் இருந்து வந்தவை தான் தற்பொழுது இருக்கும் ஓநாய்கள்.

   இத்தனை வருடங்கள் நாய்கள் இனம் வாழ்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதபடுவது, அதன் பற்கள், நாய்களின் எலும்புகள் பலம் பெரும் போது அதன் பற்களும் பலம் பெற்றன. அதன் கடவாய் பல் இறையின் எலும்பை கூட உடைக்கும் பலம் பெற்றது. முன் பற்கள் இறையில் துளையிட உதவும். அதன் பற்கள் மனிதர்களின் பற்களை போல் எளிதில் விழுந்து விடாது. அதனால் தான் நாய்களால் எந்த வகை உணவையும் உட்கொள்ள முடியும். இந்த பொருளையும் கடிக்க முடியும். நாம் நினைத்தது போல் நாய்களுக்கு உணவளிக்க தேவையில்லை.

   காட்டு விலங்குகளை போல் தன் இறைகளை தானே வேட்டையாடும் திறன் கொண்டவை நாய்கள். காடுகள் என்ன எந்தவித சூழ்நிலைக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு தன்னை நிலைபடுத்தி கொள்ளும் திறன் பெற்றது. இதனால் தான் நாய்கள் மனித இனம் அழிந்தாலும். உயிர்பெற்று இருக்கும் என்று கூறபடுகிறது. மனிதர்களை விட நாய்கள் உண்மையில் மிகப்பெரிய போராளிகள் தான்.

No comments:

Post a Comment