மழை என்பது இயற்கையின் படைப்பு, பருவ மழைகள் சரியாக இருந்தால் மட்டுமே தண்ணீர்
பஞ்சம் ஏற்படாது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில், மழை அதிகம் வருவதில்லை, நமக்கு தெரிந்து ஆலங்கட்டி மழை, ஆசிட் மழையெல்லாம்
கேள்விப்பட்டிருப்போம்,
ஆனால் வைர
மழை பற்றி
உங்களுக்கு தெரியுமா?.
வைர மழை பொழிகிறது என்று சொன்னதும், எந்த இடத்தில் பொழியும், எப்பொழுது பொழியும் என்று பல கேள்விகள் உங்களுக்குள் வரும்.
ஆனால் அந்த அற்புதமான வைர மழை, பூமியில் பொழியவில்லை. பூமியில் இருந்து
சுமார் 830 மில்லியன் மைல்
தொலைவில் உள்ள சனி மற்றும் வியாழன் கோள்களில் தான் இந்த அற்புதம் நிகழ்ந்து
வருகிறது. அமெரிக்காவில்
உள்ள நாசாவின்
சிறந்த விஞ்ஞானிகள் ஒரு நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு, இந்த வைர மலையை பற்றி 2013 அக்டோபரில் கண்டுபிடித்தனர்.
பிறகு இந்த கண்டுபிடிப்பை பற்றிய விளக்கங்களையும் நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகளும்
வெளியிட்டனர்.
வைர மழை பொழிவிற்கான காரணம் என்னவென்றால், சனி கோளின் வலி மண்டலத்தில், கிட்டத்தட்ட 50 சதவீதம் மீத்தேன் வாயுதான் உள்ளது. இந்த மீத்தேன் வாயு, புயல் கற்று வீசும் போது, ஏற்படுகிற மின்னலால் சிதைக்கப்
பட்டு நிறமில்லாத மற்றும் வாசனையும் இல்லாத ஒரு எளிமையான கார்பனாக மாறுகிறது. இந்த எளிமையான
கார்பனுடன், ஏற்கனவே
வளிமண்டலத்தில் பிளாக் கார்பன் ஓன்று சேர்ந்து கிராபைட் உருவாகிறது. இந்த
கிராபைட் கோள்களின்
நடுப்பகுதிக்கு வரும்போது. அழுத்தம் மற்றும் இருளினால் விலை உயர்ந்த வைரமாக மாறுகிறது. காற்றில்
இருக்கும் மீத்தேன் வாயுதான் பல வேதியல் மாற்றங்களுக்கு பிறகு வைரமாக
மாறுகிறது.
இப்படி வைரமாக வரும் மழையால், சுமார் 2000 டன்னுக்கு மேல் சனி கோளில் உருவாகிறது. இதேபோல்
வியாழன் கோளிலும், 0.2 சதவீதம்
மீத்தேன் இருப்பதால்,
இதே போன்ற
பரிமாற்றங்கள் அங்கேயும் நடந்து வைரமலை வருகிறது. இந்த அளவுக்கு வைரங்கள்
மலையாக பொழிகிறது என்று தெரிந்தும் அந்த கோள்களுக்கு மனிதர்களை அனுப்பாததற்கு
காரணம் என்னவென்றால் அங்கு இருக்கும் உயர் வெப்பநிலை தான். இந்த கோள்களின் வெப்பநிலை சுமார் 8000
கெல்வின் அளவில்
இருக்கும். அதனால் வளிமண்டலத்தில் வைரமாக மாரி இருக்கும். மீத்தேன் தரையை
தொடுவதற்கு முன்னாடியே உருகிவிடும். ஏனென்றால் வைரத்தின் உருகு வெப்பநிலை 3820
கெல்வின் அளவு
மட்டும்தான்.
No comments:
Post a Comment