Thursday, 16 August 2018

இன்னும் சில காலமே


   கடும் வெயிலும், எதிர்பாராத மழையும், எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று அடம்புடிக்கும் பூச்சிகளை சமாளிக்கும் வகையில், விதவிதமான பயிர் வகைகளை தம் தமிழர்கள் பயிரிட்டு வந்துள்ளார்கள். மழையையும், நதி நீரை மட்டுமே நம்பி இருந்த காலத்தில் கூட விவசயிர்கள் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடிந்தது. லாபம் வந்தாலும் சரி, நஷ்டம் வந்தாலும், அவர்கள் கவலை பட்டதாக தெரியவில்லை. உணவுத் தேவைக்கும், அடுத்த அறுவடைக் காலம் வரையிலான சேமிப்புக்கும் மட்டுமானதாகவே வேளாண்மை தொழில் நடைபெற்று வந்தது.


   ஆனால், 2௦-ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில், அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஒற்றை பயிர் வளர்ப்பு, பணப்பயிர் சாகுபடி என்ற வேளாண்மை திட்டங்களுக்கு, வேதி உரங்களையும், பூச்சி கொல்லிகளையுமே நம்பியிருக்கும் நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிட்டன. விளைவு இன்று மண்ணின் வளத்தையும், எந்த இயற்கை சவால்களையும் எதிர்த்து நின்று குறைந்தபட்ச மகசூலுக்கு உத்தரவாதம் கொடுத்த பாரம்பரிய பயிர்களையும் இழந்துவிட்டு நிற்கிறார்கள் நம் விவசாயிகள்.


   தற்பொழுது நிலைமை என்னவென்றால், இயற்கை பாதையே சிறந்தது என்று காலம் உணர்த்தி இருக்கிறது. ஆனால், மீண்டும் அவர்கள் பழைய பாதைக்கு திரும்பிவிடக்கூடாது என்ற கொள்கையில் நவீன விவசாயம் மிகவும் கவனமாக இருக்கிறது. பூட்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல், இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் வகைகளை மரபணு மாற்றங்களின் மூலம் சாத்தியபடுத்தலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறபடுகின்றன.


   ஆனால் இது வெறும் ஆசை வார்த்தைகள் மட்டுமே, காரணம் இயற்கை பயிர்களுக்கு இணையாக, மரபணு மாற்றம் பெற்ற பயிர்களை உருவாக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment