அறிவியல் வரலாற்றில் முக்கிய
திருப்புமுனையாக அமைந்தது இருப்பது தான் விமானம். இன்றைய உலகம் சுருங்கி
போனதற்கு முக்கியமான காரணங்களில் விமானமும் ஓன்று. வானில் பறக்கும்
பறவையை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்கமுடியாது என்ற கேள்வி
உதித்ததின் விளைவாக 17 டிசம்பர் 1903ம் ஆண்டு ஆர்வில் ரைட் (ORVILLE WRIGHT) மற்றும் வில்பர் ரைட் (WILBUR WRIGHT) என்ற இரட்டை சகோதர்கள் விமானத்தை
உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.
ஆனால் விமானத்தை ரைட் சகோதர்களுக்கு
முன்னரே, இன்னொருவர்
உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகள் இன்றளவும் கூறுகின்றது. நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் (RECHARD
PEARSE) என்பவர், 31 மார்ச் 1903ம் ஆண்டு முதலாவது விமானத்தை
பரிசோதித்துள்ளார். ஆனால் அவரிடம் அந்த சமயத்தில் அதற்கான ஆதாரங்கள் இல்லாத
காரணத்தால், மீண்டும்
விமானத்தில் மாற்றங்கள்
செய்து 11 மே 1903ம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி
காட்டியுள்ளார். ஆனால் தரை இறக்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதால்,
மீண்டும் அதை சரி
செய்து இயக்குவதற்குள் ரைட்
சகோதரர்கள் முந்தி
கொண்டார்கள் என்பது பலரும் அறியாத வரலாற்று தகவல்.
ஆனால் இந்த ஆச்சரியங்களை எல்லாம் தூக்கி
சாப்பிடும் வகையில் ஒரு வரலாறு உண்டு. 5000 ஆண்டுகள் பழமையானதும். இன்றும் உலகின் தொழில்
நுட்பங்களுக்கு சவால்விட்டு கொண்டு இருக்கும் ஒரு மர்மம் நிறைந்த பூமிதான் எகிப்து தேசம்.
அனால் விமானத்துக்கும் எகிப்துக்கும்
ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா. எகிப்த்தின் பிரமிடுகள் அதன் தொழில்
நுட்பத்திருக்காக இன்று வரை ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அப்படி
ஆராய்ந்த போது. இன்றைய விமானத்தை ஒத்து போகும் அளவுக்கு பல உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய பயன்பாட்டில் இருக்கும் நவீன விமானமானது, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம்
முன்னோர்கள் விமானத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அது எப்படி
சாத்தியமானது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் இருந்திருந்தால் பின்
எப்படி பிற்காலத்தில் அது அழிந்து போனது. இது போன்ற கேள்விகளுக்கு விடை
இன்றளவும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
நம்மில் சிலருக்கு இந்த சந்தேகங்கள்
ஏற்படலாம். அவைகள் ஏன் வெறும் உருவ பொம்மைகளாகவும், கற்பனை உருவங்களாகவும் இருக்க கூடாது
என்று. ஆனால் அந்த உருவங்களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. அவை இன்றைய
விமானங்களுடன் 100 சதவீதம்
பொருந்தி போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூடுகிறார்கள்.
No comments:
Post a Comment