நாம் பள்ளிகளில் படித்த அறிவியல் மற்றும் சில விஞ்ஞான
வரலாறுகள் பெரும்பாலும்
மிகைப்படுத்தி எழுதப்பட்டது தான். அதுதான் உண்மை என்று நாம் இன்றும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
ANCIENT BATTERY : கிட்டத்தட்ட 18ம் நூற்றாண்டு வரையிலும், BATTERY யை பற்றிய எந்த ஒரு ஆய்வுகளும்
இந்த உலகில் நடத்தப்பட வில்லை என்கிறது வரலாறு. ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர்
முனிவர் தனது
குறிப்புகளில் துத்த நாகம், செப்பு
மற்றும் களிமண் கொண்டு மின் கலம் தயாரித்தற்கான செயல்முறைகளை எழுதி
வைத்துள்ளார். இந்த குறிப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டேவிட்
மற்றும் மைக்கேல் என்பவர்கள் அகத்தியரின் செயல்முறையை தொலைக்காட்சி மூலம்
செயல்படுத்தி 1 VOLT வரை
மின்சாரம் தரியாரித்துள்ளனர். இதே போல பல பேட்டரிகளை ஒன்றாக இணைத்தால் பல
மடங்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
CHINA WALL : சீனப்பெருஞ்சுவர் என்றதும் நம் நினைவுக்கு வருவது உலகின் மிக
நீளமான சுவர்.
உலக அதிசயங்களில் ஒன்றான இதனை நிலவில் இருந்து கூட தெளிவாக காணமுடியும் என்பதுதான். ஆனால், இது உண்மையல்ல. சீனப்பெருஞ்சுவர் நீளம்
பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இருந்தாலும் கூட இதன் அகலம் வெறும் 30 அடி மட்டும்தான். எனவே 2012ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்கள் பூமிக்கு
மிக அருகில் சென்று பார்த்தால் கூட, சீனப்பெருஞ்சுவர் முற்றிலுமாக தெரிவதில்லை என்று கூறியுள்ளனர். மேலும் சில
தொலைநோக்கி உதவிகளுடன் பார்த்தால் மட்டும் தான்
சீனப்பெருஞ்சுவர் ஒரு மெல்லிய கோடு
போல தோன்றுவதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் சீனப்பெருஞ்சுவர் போல தெரியும் செயற்கைக் கோள் புகைப்படம் கூட மிகைப் படுத்தப்பட்டது தான்.
THOMAS ALVA EDISON : நமது வாழ்வில் தினமும் பயன்படுகின்ற
மின்விளக்கை கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன் என்று
தான் சொல்வார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் 1879ல் தான் மின்விளக்கை கண்டுபிடித்து
பொதுமக்கள் முன்பு பயன்படுத்தி காட்டினார். ஆனால் இந்த நிகழ்வுக்கு 80
ஆண்டுகளுக்கு முன்பே ஹங்ரி
டேவி என்பவர் மின்சார
பேட்டரிகளால் இயங்கக்கூடிய
மின்விளக்கை கண்டுபிடித்துவிட்டார். இருப்பினும் இதனை உருவாக்க அதிக செலவுடைய பேட்டரிகள்
தேவைப்பட்டதாலும், இதனால்
குறைந்த நேரம் மட்டுமே ஒளி உருவாக்க முடிந்ததாலும், இந்த கண்டுபிடிப்பு வரலாற்றில் இருந்து
முற்றிலுமாக மறைந்துவிட்டது. அதன் பின்பு வந்த தாமஸ் ஆல்வா எடிசன் குறைந்த
செலவில் மின்சாரம் மூலம் நிரந்தரமாக ஏறியக்கூடிய மின்விளக்கை
உருவாக்கியதால்
இவரின் கண்டுபிடிப்பு அனைவராலும், ஏற்றுக்கொள்ளப்பட்டு வரலாற்றில்
இடம்பிடித்தார்.
COLUMBUS : 1492ல் முதன்முதலாக அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் என்றுதான்
இதுவரை நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இவர் அமெரிக்காவை கண்டறிவதற்கு 500
ஆண்டுகள் முன்னரே LEIF ERIKSON என்பவரின்
தலைமையிலான ஐரோப்பியக் குழு ஓன்று புதிய உலகை கண்டறிவதற்காகவே கடல்
வழியாக பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது இடையில் ஓய்வு எடுப்பதற்காக ஒரு
மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டறிந்துள்ளார். அதுதான் இன்றைய வட
அமெரிக்காவின் ஒரு
பகுதியான பின்லாண்ட்.
மனிதன்
: குரங்கின்
வழித்தோன்றலாக பிறந்தவன்
மனிதன் என்ற கோட்பாடு
தான் இது வரையிலும்
நம்பப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்திய ஆராச்சியின் படி மனிதன் மற்றும் மனித குரங்குகளான சிம்பொன்சி
போன்றவற்றின் மரபணுக்கள் 99
சதவீதம் ஒத்துபோகிறதாம். எனவே மனிதன் குரங்கில் இருந்து நேரடியாக
தோன்றவில்லை என்றும், மனிதன் மற்றும் குரங்குகள் என இருவருமே ஒரு பொதுவான முன்னோடிகளில் இருந்து உருவாகி உள்ளதாக ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். சுமார் 68 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பரிமாற்றம் நிகழ்ந்ததாகவும்.
நம்முடைய முன்னோடி இனம் முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment